உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிருதுமால் நதி நீர் பங்கீட்டில் நிரந்தர ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தல்

கிருதுமால் நதி நீர் பங்கீட்டில் நிரந்தர ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தல்

நரிக்குடி: 30 ஆண்டுகளாக கிருதுமால் நதிநீர் பங்கீட்டில் உரிமை போராட்டமான நிரந்தர ஆயக்கட்டுக்கு அரசாணை வழங்க வேண்டும், என 46 கண்மாய் பாசன விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நரிக்குடி வீரசோழனில் வைகை, கிருதுமால் நதி விவசாயிகள் சங்க கலந்தாய்வு கூட்டம், தலைவர் பஷீர் அகமது தலைமையில், பொதுச் செயலாளர் உறங்காபுலி, பொருளாளர் ராஜாங்கம் முன்னிலையில் நடந்தது. நரிக்குடி, வீர சோழன், உலக்குடி, இருஞ்சிறை உள்ளிட்ட 46 கண்மாய் பாசன விவசாயிகள் பங்கேற்றனர். கிருதுமால் நதி பாசன விவசாயிகள் நிரந்தர ஆயக்கட்டு உரிமைக்காக 30 ஆண்டுகளாக போராடுகின்றனர். 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் ஆயக்கட்டை முழுமையாக நிறைவேற்றி, அரசாணை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் 46 கண்மாய் பாசன விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அமை வேகத்தில் நடைபெறும் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். இத் திட்டத்தை தொடர்ந்து, கோதாவரி நதியை காவிரியோடு இணைக்க வேண்டும். கிருதுமால் நதியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, ஷட்டரை பழுது நீக்க வேண்டும். கோவிலாங்குளம் வேளாண் பல்கலையில், சிப்காட் பயன்பாட்டிற்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை