உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பட்டாசு ஆலை வெடி விபத்து; பெண்கள் 2 பேர் காயம்

 பட்டாசு ஆலை வெடி விபத்து; பெண்கள் 2 பேர் காயம்

விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி 40, சங்கரேஸ்வரி 45, காயமடைந்தனர். விருதுநகர் அருகே முதலிப்பட்டியில் பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி, சங்கரேஸ்வரி ஆகியோர் நேற்று மதியம் உணவு இடைவெளிக்கு பின் பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உராய்வு ஏற்பட்டு நடந்த வெடி விபத்தில் இரு பெண்களும் காயமடைந்து விருதுநகரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை