உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இருக்கன்குடி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் வழங்க எதிர்பார்ப்பு

இருக்கன்குடி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் வழங்க எதிர்பார்ப்பு

சாத்துார், : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு தை, ஆடி மாதங்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவர். தற்போது தை மாதம் என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.துாத்துக்குடி , திருவேங்கடம், சங்கரன்கோயில் , தென்காசி,, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் சிவகாசி பகுதிகளில் இருந்தும் சாத்துார் வழியாக இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.மேலும் இருக்கன்குடி கோயிலுக்கு கார், வேன் , லாரி, லோடு ஆட்டோ, டூவீலர்களிலும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். இதனால் சாத்துார் இருக்கன்குடி ரோட்டில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் வாகன ஓட்டிகளால் பக்தர்களின் மீது மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.தற்போது அதிகாலை நேரங்களில் அதிக அளவில் பனி பொழிவதால் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு பாதையில் நடந்து செல்லும் பக்தர்கள் தெரியாமல் அவர்கள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே போக்குவரத்து போலீசார் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகளை அவர்கள் அணிந்து செல்லும் சட்டைகளில் ஒட்டி விடவும் மேலும் டார்ச் லைட் போன்ற விளக்குகளை அடித்தபடி நடந்து செல்லவும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி