உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோயில்களில் கும்பாபிஷேகம்

கோயில்களில் கும்பாபிஷேகம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் 4 கோயில்கள் கும்பாபிஷேகம் நடந்தது.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் படித்துறை விநாயகர் கோயில், வினை தீர்க்கும் விநாயகர் கோயில், வல்லப கணபதி கோயில், நீர் காத்த அய்யனார் கோயில்களின் கும்பாபிஷேகம் நேற்று காலை 9:30 மணிக்கு நடந்தது.கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி பூர்ணாகுதி, 4 கால பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று காலை 9:30 மணிக்கு விமான கும்பாபிஷேகம் மூலஸ்தான கும்பாபிஷேகம் மகா தீபாராதனை நடந்தது.கலசங்களுக்கு புண்ணிய நீர் தெளிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், வல்லப கணபதி, அய்யனார் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ