உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சிவகாசியில் ரோட்டில் திரியும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 சிவகாசியில் ரோட்டில் திரியும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சிவகாசி: சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோட்டில் நடமாடும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. மேலும் இந்த ரோட்டை கடந்து தான் ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இந்நிலையில் வேலாயுத ரஸ்தா ரோட்டில் எந்நேரமும் மாடுகள் நடமாடுகின்றது. இதனால் எந்த வாகனமும் எளிதில் சென்று வர முடியவில்லை. போக்குவரத்து நிறைந்த ரோட்டில் மாடுகள் நடமாடுவதால் அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமப்படுவதோடு விபத்திலும் சிக்குகின்றனர். ஒரு சில மாடுகள் பயந்து ஓடி வாகன ஓட்டிகளை விபத்திற்கு உள்ளாக்குகிறது. எனவே இப்பகுதியில் நடமாடுகின்ற மாடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை