உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கூலித்தொழிலாளி கொலை; 7 பேர் கைது

கூலித்தொழிலாளி கொலை; 7 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் : சிவகாசி தாலுகா அருணாசலபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மாரிமுத்து,52, என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே ஊரைச் சேர்ந்த 7 பேரை மல்லி போலீசார் கைது செய்தனர்.சிவகாசி தாலுகா அருணாசலபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மாரிமுத்து,52, இவர் நேற்று முனிதினம் மாலை 5:15 மணிக்கு தனது டூவீலரில் அப்பகுதி கண்மாய் கரை ரோட்டில் செல்லும் போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இச்சம்பவம் தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த முனீஸ்வரன், கூடலிங்கம், அருண்குமார், ஜோயல், லட்சுமணன், தனுஷ், முனீஸ்வரி ஆகிய 7 பேரை மல்லி போலீசார் கைது செய்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், அருணாசலபுரத்தைச் சேர்ந்த சந்தனகுமார் 2001ல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தற்போது கொல்லப்பட்ட மாரிமுத்துவின் மூத்த மகன் செந்தில்குமார் ஈடுபட்டதால் அதற்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை