உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஊராட்சி துணைத்தலைவர் கணவர் உறவினர் கொலையில் கைது

ஊராட்சி துணைத்தலைவர் கணவர் உறவினர் கொலையில் கைது

சிவகாசி : சிவகாசியில் உறவினர் கணேசனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த ஆணையூர் ஊராட்சி துணை தலைவரின் கணவர் தங்கப்பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.சிவகாசி அருகே ஆணையூர் ஊராட்சி துணை தலைவர் முத்துமாரி. இவரது கணவர் தங்கபாண்டியன் 35. முத்துமாரியின் சகோதரிக்கும் அவரது கணவரான சிவகாசி ரிசர்வ் லைன் இந்திரா நகரை சேர்ந்த கணேசனுக்கும் 37, இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.இதுகுறித்து பேசுவதற்காக முத்துமாரியும், அவரது கணவரும் சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் தங்கபாண்டியன், அரிவாளால் வெட்டியதில் கணேசன் இறந்தார். டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த தங்கபாண்டியனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். சம்பவ இடத்தில் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, ஏ.டி.எஸ்.பி., அசோகன் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி