உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஒன்றியத்திற்குள் இடமாற்றம் ஊராட்சி செயலர்கள் நிம்மதி

ஒன்றியத்திற்குள் இடமாற்றம் ஊராட்சி செயலர்கள் நிம்மதி

ஸ்ரீவில்லிபுத்தூர்: மாவட்டத்தில் ஊராட்சி செயலர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தந்த ஒன்றியத்திற்குள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் ஊராட்சி செயலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ள நிலையில் ஊராட்சி செயலர்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர். இதில் ஒரு சில ஊராட்சி செயலர்கள் செய்த தவறுகள், அவர்கள் மீதான புகார்கள், கிராமங்களில் அலட்சியப் போக்குடன் செயல்படுவது போன்ற புகார்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரிய வந்தது. இதில் பல இடங்களில் செயலாளர்களின் உறவினர்களே தலைவராக இருப்பது மக்களுக்கு பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்தியது.இதனையடுத்து நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றிய செயலர்கள் உட்பட அனைவரையும் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது.இதற்கு ஊராட்சி செயலர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. ஊராட்சி தலைவர்கள் தரப்பிலும் செயலர்களை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு இடமாற்றம் செய்யும் முடிவு கைவிடப்பட்டு, அந்தந்த ஒன்றியத்திற்குள் மட்டுமே ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதால் ஊராட்சி செயலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை