உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது

 பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பேப்பர் கட்டிங் நிறுவனத்தின் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மூன்று பேரை கைது செய்த நிலையில் மேலும் நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி விஸ்வநத்தம் ரோடு பகுதியில் கென்னடி கண்ணன் 50, என்பவர் பட்டாசு தயாரிக்க தேவைப்படும் பேப்பர் கட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் அருகே மது அருந்திய வாலிபர்களை கண்டித்ததால் நேற்று முன்தினம் சில வாலிபர்கள் நிறுவனத்தின் பின்பக்க ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டை வீசினர். இதில் கென்னடி கண்ணன் காயம் அடைந்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட தங்கப்பாண்டி, தங்க முனீஸ்வரன், மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்த நிலையில் சங்கரேஸ்வரன் 20, மற்றும் 17 வயதுடைய நான்கு சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி