உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

ஓடையில் ஆண் சடலம்சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே வேலாயுதபுரம் ஓடை பாலம் அடியில் ஆண் சடலம் மிதந்தது. விசாரணையில் சம்சிகாபுரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த சரவணன் 45, வெல்டிங் பட்டறை தொழிலாளி என்பது தெரிந்தது. மனைவி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூன்று நாட்களாக காணவில்லை. இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.போதையில் தடுமாறி விழுந்து பலிதளவாய்புரம்: தளவாய்புரம் அருகே பொட்டல்பட்டி பகுதியை சேர்ந்த வேலுச்சாமி 56, ரைஸ் மில் தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் வீட்டின் மாடியில் துாங்க சென்று இரவு சிறுநீர் கழிக்க திரும்பும் போது மாடியில் இருந்து விழுந்து பலத்த காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தற்கொலைசேத்துார்: சேத்துார் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க மாரியப்பன் 36, காதலித்து திருமணம் செய்து இரண்டு மகள்கள் உள்ளனர். இந் நிலையில் குழு கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் இருந்தும் உடல் பாதிப்பினால் வேலைக்கு செல்லாமல் இருந்தவர் அவரது தாயார் வீட்டில் வைத்து துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.இளம்பெண் மாயம்சிவகாசி: காக்கி வாடன் பட்டி எஸ்.ஆர்., காலனியைச் சேர்ந்தவர் நித்யகங்கா 20. பட்டதாரியான இவர் தனது தாயாருடன் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வீட்டிலிருந்து கடைக்கு போவதாக கூறிச் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.------பானி பூரி கேட்டு தகராறுவிருதுநகர்: அய்யானார் நகரைச் சேர்ந்தவர் பொன்பாண்டி 20. இவர் தேசபந்து மைதானத்தில் பானி பூரி கடை நடத்தும் கசாப்புக்காரத்தெருவைச் சேர்ந்த திருவள்ளுவன் 61 என்பவரிடம் ஜன. 21 இரவு 9:00 மணிக்கு பானிபூரி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபர் நீரில் மூழ்கி பலிவிருதுநகர்: சிவகாசி அருகே முதலிப்பட்டியைச் சேர்ந்தவர் கருணாகரன் 22. இவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் அண்ணன் நாகராஜ் கவனிப்பில் இருந்துள்ளார். ஜன. 19 இரவு வழக்கம் போல துாங்க சென்றவரை நாகராஜ் மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு சென்று பார்த்த போது இல்லாததால் தேடியுள்ளார். ஜன. 21 காலை 6:00 மணிக்கு ஊருணியில் பிரேதமாக கிடைத்துள்ளார். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ