உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசியல் விளம்பரங்கள் வர்ணம் பூசி அழிப்பு

அரசியல் விளம்பரங்கள் வர்ணம் பூசி அழிப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்ததால் விருதுநகரில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜ் முழு உருவச்சிலைகள் துணியால் சுற்றி மூடப்பட்டது.இதே போல நகரின் பிற பகுதிகளில் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டன. மேம்பாலங்கள் தடுப்புச்சுவர்கள், சுவர்களில் தீட்டப்பட்டிருந்த அரசியல் விளம்பரங்கள் வர்ணம் பூசி அழிக்கப்பட்டன. இந்நிலையில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக்குழு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை