உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பிரச்சினையும் தீர்வும்

 பிரச்சினையும் தீர்வும்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தெருக்கள் முதல் அனைத்து பஜார் வீதிகளிலும் ரோட்டோர நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் செய்வது தொடர்கதையாகவே நீடிப்பதும், நாளுக்கு நாள் அதிகரிப்பதும் இதனால் எளிதில் ஆம்புலன்ஸ்கள், பஸ்கள் வந்து செல்ல முடியாமலும் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென எதிர் பார்க்கின்றனர். நகரில் பஸ் ஸ்டாண்டை சுற்றி அரசு மருத்துவமனை, காய்கறி மார்க்கெட், வங்கிகள், நகைக்கடைகள், பலசரக்கு கடைகள், தனியார் மருத்துவ மனைகள் இருப்பதால் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து. அரசு மருத்துவமனையின் மேற்கு பகுதியில் நகராட்சி சைக்கிள் ஸ்டாண்டும், வடக்கு பகுதி யில் மீன் கடைகளும் ரோட்டை ஆக்கிரமித்து கொண்டு ஆம்புலன்ஸ்கள் எளிதாக வர முடியவில்லை. அரசு பஸ் டிப்போ முதல் ஆண்டாள் தியேட்டர் வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் டூவீலர்கள் முதல் கனரக வாகனங்கள் வரை தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. கிழக்கு ரத வீதியில் பால்கோவா கடைகள் போட்டி போட்டு தேசிய நெடுஞ்சாலை ரோட்டின் வெள்ளை கோடு வரை நீட்டித்துள்ளதால் டூவீலரில் வருபவர்கள் விபத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளது. வடக்கு ரத வீதியில் மாலை 6:00 மணிக்கு மேல் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதி மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் எளிதில் வந்து செல்ல முடியவில்லை. நான்கு வழிச்சாலை வழியாக வரும் வெளியூர் வாகனங்கள் என்.ஜி.ஓ. காலனி ரோடு வழியாகவும், சர்ச் சந்திப்பு வழியாக வருவதாலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பள்ளிவாசல் முதல் ஆண்டாள் கோயில் வரை பஜார் வீதி கடைகள் இருபுறமும் போட்டி போட்டு ஆக்கிரமித்து வருகின்ற னர். தள்ளுவண்டிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து நட வடிக்கை எடுக்கவேண்டிய நகராட்சி, மாநில நெடுஞ்சாலை, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சிய போக்குடன் இருப்பதால் மக்கள் தினமும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இத்தகைய பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். மாணவர்கள் அச்சம் -சுரேஷ் நெப்போலியன், வழக்கறிஞர்: தற்போது நான்கு வழி சாலை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் கார்கள் முதல் கனரக வாகனங்கள் வரை என்.ஜி.ஓ. காலனி ரோடு வழியாக வருவதால் அவ்வழியாக பயணிக்கும் பள்ளி மாணவர்கள் விபத்திற்கு ஆளாகும் அபாயம் காணப்படுகிறது. முதியவர்கள், மாற்றத்திறனாளிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கண்துடைப்பான பணி - கிருஷ்ணகுமார், சுய தொழில் முனைவோர்: நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தேரோட்ட திருவிழாவின் போது நான்கு ரத வீதியில் மட்டும் தான் கண் துடைப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது நகரின் அனைத்து பகுதிகளிலும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு பெருகி வருவதை தடுக்க அடிக்கடி அகற்ற வேண்டும். பார்க்கிங் வசதி இல்லாமல் வணிக வளாகங்கள் கட்டப்படுவதால் ரோட்டில் தான் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் கர்ப் பிணிகள், மாற்றுத் திறனாளிகள் நடந்து செல்ல கூட முடியவில்லை. நடந்து செல்ல முடியவில்லை -ராஜேஸ்வரி, குடும்பத் தலைவி: பஜாரின் அனைத்து வீதிகளிலும் மக்கள் நடந்து செல்லும் நடைபாதைகள் ஆக்கிர மிக்கப்பட்டும், தாறு மாறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டும் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ்கள் எளிதில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இதனை போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை