உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ரயில்வே டவர் வேகன் ஷெட் சுற்றி ----கழிவு பொருட்களால் அபாயம்

 ரயில்வே டவர் வேகன் ஷெட் சுற்றி ----கழிவு பொருட்களால் அபாயம்

ராஜபாளையம்: ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் பழுது பணிகளுக்கான 'ரயில்வே டவர் வேகன் ஷெட்' சுற்றி கழிவு ஆக்கிரமிப்புகளை குவிப்பதால் தீ விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகர்- செங்கோட்டை அகல ரயில் பாதை மின்மயமாக்கல் 2022 மார்ச்-ல் சோதனை ஓட்டம் நடந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விருதுநகரிலிருந்து செங்கோட்டை வரையிலான மின் வழித்தடத்தில் திடீரென பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யும் வகையில் ரயில்வே டவர் வேகன் ஷெட் ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் அமைக்கப்பட்டது. மின்தடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், பழுதுகளை நீக்கவும் பணிமனை பயன்படுகிறது. நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள டவர் வேகன் ஷெட் , அதன் அருகே தண்டவாள பகுதிகளில் தனியார் சிலர் மாதக்கணக்கில் கழிவு பொருட்களை குவித்து வைத்துள்ளனர். இதனால் கழிவுப் பொருட்களில் தீ விபத்து ஏற்படும் அபாயத்துடன் வாகனங் களுக்கு இடையூறு ஏற்படுகிறது. நாகராஜ், நகராட்சி கமிஷனர்: ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இடையூறு, தீ விபத்து ஏற்படும் என்பதால் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ