உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தமிழ்பாடியில் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்

 தமிழ்பாடியில் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்

திருச்சுழி: திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்தில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழ்பாடி - ஆலடிபட்டி ரோடு உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், குடியிருப்பு பகுதிகள் தாழ்ந்த நிலையில், வாறுகால் வசதியும் செய்யப்படவில்லை. மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகள் வெள்ள காடாக மாறி விடுகிறது. நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழையில் வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. வெளியேற வாறுகால் வசதி இல்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால், மக்கள் அவதிப் படுவதுடன் சுகாதார கேடாகவும் உள்ளது. திருச்சுழி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இந்த பகுதியில் வாறுகால் அமைத்து, மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகாசி சிவகாசி செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி ஸ்டேட் பேங்க் காலனியில் 10 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இவற்றில் ஒரு சில தெருவில் ரோடு அமைக்கப்பட்டுள்ள நிலையில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறுவதற்கு வழி இல்லை. அதே சமயத்தில் மழை நீரும் வெளியேற வழியில்லை. இந்நிலையில் சமீபத்தில் இப்பகுதியில் மழை பெய்ததில் ஸ்டேட் பேங்க் காலனி இரண்டாவது தெருவில் தண்ணீர் குளம் போல் தேங்கி விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை