உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ரேஷன்கடை பணியாளர்கள் சங்க கூட்டம்

 ரேஷன்கடை பணியாளர்கள் சங்க கூட்டம்

விருதுநகர்: விருதுநகர் ஆர்.ஆர்.நகரில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாவட்டக் குழு கூட்டம், பொருளாளர் மாரிமுத்து தலைமையில் நடந்தது. ரேஷன் கடை பணியாளர்களுக்கு புதிய ஊதிய அறிவிப்பு வரும் சட்டசபை தேர்தலுக்குள் அறிவிக்க வேண்டும். தாயுமானவர் திட்ட குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். மாநிலத் தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் தினேஷ் குமார், துணைத் தலைவர்கள் சங்கர், பிரகாஷ், தங்கபூமி உட்பட மதுரை, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள், விருதுநகர், சாத்துார், சிவகாசி தாலுகா பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை