உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பணியிட மாறுதலில் சிபாரிசுகளுக்கே முன்னுரிமை; மன உளைச்சலில் போலீசார்

பணியிட மாறுதலில் சிபாரிசுகளுக்கே முன்னுரிமை; மன உளைச்சலில் போலீசார்

விருதுநகர் : மற்ற மாவட்டத்தில் பணிபுரியும் விருதுநகர் மாவட்டபோலீசார் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பிக்கும் போது சிபாரிசுகளில் வருவோருக்கே முன்னுரிமை வழங்கப்படுவதால் மற்றவர்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.விருதுநகர் மாவட்டத்தை சொந்த ஊராக கொண்ட போலீசார் அதிகம் பேர் மற்ற மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக சொந்த மாவட்டத்திற்கு வர விண்ணப்பிக்கும் போது மாவட்ட வாரியாக தரவரிசை பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது.இந்த பட்டியலில் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளின் சிபாரிசு பெற்றவர்கள் எளிதாக முன்னுரிமை பெற்று பணியிட மாறுதல் பெறுகின்றனர். ஆனால் எவ்வித சிபாரிகளும் இல்லாத பலர் பணியிட மாறுதலுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.போலீசாரின் பணியிட மாறுதலில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படாமல் இருப்பதால் மன உளைச்சல் அதிகரிப்பதாக போலீசார் கூறுகின்றனர். எனவே சிபாரிசுகளை தவிர்த்து வெளிப்படைத்தன்மையுடன் முன்னுரிமை பட்டியலை வெளியிட்டு பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும் என மற்ற மாவட்டங்களில் பணிபுரியும் போலீசார் எதிர்ப்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ