உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டிரான்ஸ்பார்மருக்கு அடியில் குப்பை எரிப்பதால் விபத்து அபாயம்

டிரான்ஸ்பார்மருக்கு அடியில் குப்பை எரிப்பதால் விபத்து அபாயம்

விருதுநகர்: விருதுநகரில் டிரான்ஸ்பார்மருக்கு அடியில் குப்பை எரிக்கப்படுவதால் மின் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விருதுநகர் பாவாலி ஊராட்சி அய்யனார் நகரில் இருந்து நான்கு வழிச்சாலை செல்லும் ரோட்டில் அதன் வளைவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் அடியில் குப்பை கொட்டப்படுகிறது. இதை ஊராட்சி ஊழியர்கள் அகற்றாமல் குப்பையை எரித்து விட்டு செல்கின்றனர்.இது டிரான்ஸ்பார்மர் அடிப்புறத்தில் இருந்து எரிவதால் கம்பிகளில் தீ பட்டோ அல்லது சூடு காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி மின் சப்ளையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே டிரான்ஸ்பார்மர் அடிப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். மீறி கொட்டினாலும், குப்பையை எரிக்காமல், அள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை