உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நரிக்குடி மினாகுளத்தில் பள்ளி கட்டடம் சேதம்

 நரிக்குடி மினாகுளத்தில் பள்ளி கட்டடம் சேதம்

நரிக்குடி: நரிக்குடி மினாக்குளத்தில் துவக்கப் பள்ளி கட்டடம் சேதமடைந்ததால், நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் இட நெருக்கடியில் பாடம் கற்றுத் தருவதால், துவக்கப் பள்ளி மாணவர்கள் சிரமத்தில் உள்ளனர். புதிய கட்டடம் கட்ட எதிர்பார்க்கின்றனர். நரிக்குடி மினாக்குளத்தில் நடுநிலைப் பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், 6, 7, 8, வகுப்பு மாணவர் களுக்கு வேறு இடத்திலும் கட்டடங்கள் உள்ளன. துவக்கப் பள்ளி கட்டடம் கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் தற்போது சேதம் அடைந்து கட்டடம் வலுவிழந்து உள்ளது. அக் கட்டடத்தில் மாணவர்கள் அச்சத்துடன் படித்தனர். சமீபத்தில் பெய்த கன மழைக்கு திடீரென கூரை பெயர்ந்து விழுந்தது. மாணவர்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து ஒன்றிய அலுவலகத்தில் பெற்றோர் புகார் தெரிவித்தனர். அங்குள்ள இ. சேவை மைய கட்டடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதுவரை நடவடிக்கை இல்லை. பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்கினர். இதையடுத்து மாற்று ஏற்பாடாக நடுநிலைப்பள்ளி வகுப்பு மாணவர் களுடன் ஒரே கட்டடத்தில் உட்கார வைத்து பாடம் கற்று தருவதால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாடத்தை முழுமையாக கவனிக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பழைய துவக்கப்பள்ளி கட்டடத்தை அப்புறப் படுத்தி, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை