உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சித்தப்பா வெட்டி கொலை: மகனுக்கு ஆயுள் தண்டனை

சித்தப்பா வெட்டி கொலை: மகனுக்கு ஆயுள் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்துார்: சாத்துார் அருகே கே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ்,52, விவசாயி. இவரது பங்காளி சண்முகவேலின் மகன் குருநாதன், 27. இருவருக்கும் இடையே குடும்ப சொத்தை பாகம் பிரிப்பதில் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் 2013 மார்ச் 25 இரவில் தனது சித்தப்பாவான அந்தோணி ராஜை, அரிவாளால் வெட்டி குருநாதன் கொலை செய்துள்ளார். சாத்தூர் தாலுகா போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் கொலை செய்த குருநாதனுக்கு ஆயுட்கால சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.யானைக்கு பயந்து மரத்திலிருந்து விழுந்தவர் பலிசேத்துார்: கேரள மாநிலம் தேவியோடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் 58, கூலி தொழிலாளி. மனைவி இரண்டு மகள்கள் உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை சேத்துார் மலை மேல் உள்ள காவு எஸ்ட்டேட்டில் கிராம்பு ஒடித்து கொண்டிருந்தார். யானை சத்தத்தால் சக பணியாளர்கள் குடியிருக்கும் இடத்திற்கு ஓடி பதுங்கிய நிலையில் விஜயனை தேடிச் சென்ற போது யானைக்கு பயந்து கிராம்பு மரத்தில் ஏறி கீழே இறங்கும் போது விழுந்து காயமடைந்து கிடந்தார். மலைப்பாதை வழியாக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா விற்பனை; இருவர் கைதுவிருதுநகர்: அல்லம்பட்டி ராமன் தெருவைச் சேர்ந்தவர்கள் கணேசன் 55. சுரேஷ் 58. இவர்கள் அதே பகுதியில் கஞ்சாவை விற்பனை செய்ததை கிழக்கு எஸ்.ஐ., ரவி கண்டறிந்து 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தார்.முதியவர் தற்கொலைவிருதுநகர்: தியாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் பெத்தனசாமி 60. இவர் ஜூலை 17 மதியம் 3:50 மணிக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி திட்டினார். இதனால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டாசு பதுக்கிய வால்டர் வெற்றிவேல்சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் பள்ளபட்டி ரோடு திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் வால்டர் வெற்றிவேல் 30. இவர் அரசு அனுமதி பெறாமல் தனது வீட்டில் ஸ்மோக்கிங் எனும் பேன்சி ரக வெடியை பதுக்கி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை