உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வெயிலால் செண்டு பூ விளைச்சல் பாதிப்பால் தவிப்பு! விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை

வெயிலால் செண்டு பூ விளைச்சல் பாதிப்பால் தவிப்பு! விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் செண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போதிய விலை கிடைக்காமல் நஷ்டத்தை சந்திப்பதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வெளியில் செல்வதற்கு அஞ்சி வீட்டிலேயே இருந்து விட்டு மாலை நேரத்தில் தான் வீடுகளுக்கு தேவையானவற்றை வாங்குவதற்கு பஜார் பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் கீழஅழகியநல்லுார், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மானாவாரி பயிர்கள் பயிரிடுவது வழக்கம். இந்த முறை நீர்நிலைகளில் தண்ணீர் நன்றாக இருப்பதால் கிணறுகளிலும் நீர் வற்றாமல் உள்ளது.இப்பகுதியில் செண்டு பூ நடவு செய்யப்பட்டு பறிப்பு நடந்து வருகிறது. ஒரு ஏக்கருக்கு நிலத்தை தயார் செய்தல், செண்டு கட்டுக்கள் வாங்குதல், மருந்து, வேலை ஆட்கள் கூலி என மொத்தம் ரூ. 20 ஆயிரம் செலவாகிறது.இந்த முறை வழக்கத்தை விட முன்கூட்டியே பயிரிட்டதால் பூக்கள் நன்றாக பூக்க துவங்கியது. இதனால் பறிப்பு துவங்கிய சிறிது நாள்கள் மட்டும் ஒரு கிலோ ரூ. 50 முதல் 60 வரை விலை போகி நல்ல லாபம் கிடைப்பதுள்ளது.ஆனால் தற்போது முன்கூட்டியே வெயில் காலம் துவங்கியதால் நன்கு தண்ணீர் பாய்ச்சினாலும் போதிய விளைச்சல் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் விளைச்சல் இல்லாத பூக்கள் ரூ. 20 முதல் 25 என விற்பனையாவதால் மேற்கொண்டு செலவு செய்வதற்கு யோசிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.விவசாயி சோணை கூறியதாவது:செண்டு பூ நல்ல விலைக்கு போகும் என எதிர்பார்த்த நிலையில் வெயிலின் தாக்கத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 முறை பறிப்பு நடந்துள்ளது. ஆனால் தற்போது விளைச்சல் குறைந்து விலையும் சரிந்து உள்ளதால் பூக்களை பறிக்கவில்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி