உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தினமும் 3 முறை சென்ற பஸ் ஒரு முறை மட்டுமே இயக்கம்; அவதியில் சுந்தரபாண்டியம் மக்கள்

 தினமும் 3 முறை சென்ற பஸ் ஒரு முறை மட்டுமே இயக்கம்; அவதியில் சுந்தரபாண்டியம் மக்கள்

வத்திராயிருப்பு, : அருப்புக்கோட்டையில் இருந்து சுந்தரபாண்டியத்திற்கு தினமும் 3 நேரங்கள் இயங்கி வந்த அரசு பஸ், வத்திராயிருப்பு டிப்போவிற்கு மாற்றப்பட்ட பிறகு தினமும் ஒரு நேரம் மட்டுமே வருவதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஜவுளி, நூல் வியாபாரம், திருமண சம்பந்தம் தொடர்பின் காரணமாக அருப்புக்கோட்டைக்கு தினமும் அதிகளவில் பயணித்து வருவது வழக்கம். அருப்புக்கோட்டை மக்களும் சுந்தரபாண்டியன் வந்து செல்வார்கள். இவர்களின் நலன் கருதி 30 ஆண்டுகளுக்கு மேலாக காலை 9:00, மதியம் 3:00, இரவு 9:00 மணி என தினமும் 3 முறை சுந்தர பாண்டியத்தில் இருந்து புறப்பட்டு வத்திராயிருப்பு, அழகாபுரி, எரிச்சத்தம், விருதுநகர் வழியாக அருப்புக்கோட்டை செல்லும் வகையில் இயங்கி வந்தது. இந்நிலையில் அருப்புக்கோட்டை டிப்போவிலிருந்த இந்த பஸ் தற்போது வத்திராயிருப்பு டிப்போவிற்கு வழங்கப்பட்டு, தினமும் காலை 9:00 மணிக்கு மட்டுமே அருப்புக்கோட்டை செல்கிறது. மற்ற 2 முறை வேறு வழித்தடங்களில் இயங்கி வருகிறது. இதனால் சுந்தரபாண்டியம் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, 30 ஆண்டுகளாக இயங்கியது போல் தினமும் 3 முறைகள் சுந்தரபாண்டியம் வந்து செல்லும் வகையில் இயக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை