உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  திருத்தங்கலில் ரயில்வே பாலம் ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

 திருத்தங்கலில் ரயில்வே பாலம் ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

சிவகாசி : சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கலில் ரயில்வே கிராசிங்குகளில் மேம்பாலம் அமைக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 2024ல் சாட்சியாபுரம் கிராசிங்கில் மேம்பாலம் ரூ.62 கோடியில் கட்டப்பட்டு கடந்த வாரம் திறக்கப்பட்டது. விழாவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு திருத்தங்கல் ரயில்வே மேம்பால திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த ரூ.32 கோடியும், கட்டுமான பணிக்கு ரூ.45.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் ஒப்பந்தம் விடப்பட்டு, அடிக்கல் நாட்டும் பணி துவங்கும் என தெரிவித்தார். இந்நிலையில் மேம்பாலம் அமைக்க ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் (நவ. 19) முடிந்த நிலையில் டிச.30ல் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். திருத்தங்கல் பாலத்திற்கான பூர்வாங்க பணி தொடங்கி உள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை