மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
15 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
15 hour(s) ago
சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன்சத்திரப்பட்டி ஆனந்தநகர் ரோடு, சாக்கடை வாறுகால் குப்பைத்தொட்டி வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.ஆனந்த நகர் 4தெருக்கள் உள்ளன. அனைத்து குறுக்குத் தெருக்களிலும் பேவர் ப்ளாக் ரோடு, சிமிண்ட் ரோடு அமைத்துள்ளனர். ஆனால் நகரில் பிரதானமான நடுத்தெருவில் இருந்து ரோட்டிற்கு செல்லும் ரோடு மட்டும் கரடு முரடாக மண் சாலை உள்ளது. புதியதாக வீடு கட்டுபவர்கள் லாரியில் செங்கல் மண் சிமிண்ட் லோடு கொண்டு வரும் போது பள்ளத்தில் லாரி புதையும் நிலை உள்ளது.வாறுகால் இல்லாததால் வீடுகளில் இருந்து வரும் கழிவுநீரை ஷோக் பிட் போட்டு மண்ணுக்குள் கடத்துகின்றனர்.ஷோக் பிட் அமைக்கவும் வசதியில்லாதவர்கள் ரோட்டில் சாக்கடையை விடுகின்றனர். இவை குளம் போல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.குப்பைத்தொட்டிகள் இல்லாததால் காலியாக உள்ள இடங்களில் குப்பையை மக்கள் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகையால் மக்கள் சுவாச பிரச்சினைக்கு ஆளாகி வருகின்றனர்.ரோடு வாறுகால் தேவைபல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமிண்ட் ரோடு கற்கள் பெயர்ந்து கால்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் சாக்கடை ரோட்டில் தேங்கினாலும் காய்ந்து விடுகிறது. மழைக்காலத்தில் சாக்கடையும் மழை நீரும் கலந்து விடுவதால் காலில் சிரங்கு போன்ற தோல் நோய் ஏற்படுகிறது.்.செல்வம், குடும்பத் தலைவர் .குப்பைத்தொட்டி தேவைநகரில் காலையில் மட்டும் தான் குப்பை வாங்க வண்டி வருகிறது' அவர்களும் ஒரு நாளுக்கு ஒரு தெருவிற்கு மட்டும் தான் வருகிறார். சின்ன வண்டி என்பதால் சீக்கிரமாக குப்பை நிறைந்து விடுகிறது. இதனால் காலியாக உள்ள இடத்தில் குப்பை கொட்டுகிறோம் இதனால் சுகாதாரக்கேடும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது ஆங்காங்கே குப்பைத்தொட்டி வைக்கவேண்டும்.சுந்தரி, குடும்பத் தலைவி.தாமிரபரணி குடிநீர் வழங்க வேண்டும்தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்கின்றனர். ஆனால் இந்த தண்ணீர் தாமிரபரணி தண்ணீர் இல்லை. உள்ளூர் தண்ணீர் என்பதால் உப்புச் சுவையாக உள்ளது. ஒரு நாள் தாமிரபரணி தண்ணீர் மறுநாள் உள்ளுர் தண்ணீர் என்று வினியோகம் செய்ய வேண்டும்.பேச்சியப்பன், குடும்பத் தலைவர் .நடவடிக்கை எடுக்கப்படும்தற்போது மண் ரோடுகள் சிமிண்ட், தார்சாலையாக போடப்பட்டுள்ளது. ஆனந்த நகரில் பெரும்பாலான தெருக்களில் ரோடு வசதியுள்ளது. வாறுகால் கட்டித் தந்தோம் ஆனால் இதில் வீட்டுக்காரர்கள் மணல் கொட்டி அடைத்து விட்டனர். விரைவில் அனைத்து தெருக்களிலும் ரோடு போடப்படும் என்றார்.கனகராஜ், ஊராட்சித் தலைவர் ,அயன்சத்திரப்பட்டி .சாத்துார், மே 4-சாத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன்சத்திரப்பட்டி ஆனந்தநகர் ரோடு, சாக்கடை வாறுகால் குப்பைத்தொட்டி வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.ஆனந்த நகர் 4தெருக்கள் உள்ளன. அனைத்து குறுக்குத் தெருக்களிலும் பேவர் ப்ளாக் ரோடு, சிமிண்ட் ரோடு அமைத்துள்ளனர். ஆனால் நகரில் பிரதானமான நடுத்தெருவில் இருந்து ரோட்டிற்கு செல்லும் ரோடு மட்டும் கரடு முரடாக மண் சாலை உள்ளது. புதியதாக வீடு கட்டுபவர்கள் லாரியில் செங்கல் மண் சிமிண்ட் லோடு கொண்டு வரும் போது பள்ளத்தில் லாரி புதையும் நிலை உள்ளது.வாறுகால் இல்லாததால் வீடுகளில் இருந்து வரும் கழிவுநீரை ஷோக் பிட் போட்டு மண்ணுக்குள் கடத்துகின்றனர்.ஷோக் பிட் அமைக்கவும் வசதியில்லாதவர்கள் ரோட்டில் சாக்கடையை விடுகின்றனர். இவை குளம் போல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.குப்பைத்தொட்டிகள் இல்லாததால் காலியாக உள்ள இடங்களில் குப்பையை மக்கள் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகையால் மக்கள் சுவாச பிரச்சினைக்கு ஆளாகி வருகின்றனர். ரோடு வாறுகா ல் தேவை
செல்வம், குடும்பத் தலைவர்: பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமிண்ட் ரோடு கற்கள் பெயர்ந்து கால்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் சாக்கடை ரோட்டில் தேங்கினாலும் காய்ந்து விடுகிறது. மழைக்காலத்தில் சாக்கடையும் மழை நீரும் கலந்து விடுவதால் காலில் சிரங்கு போன்ற தோல் நோய் ஏற்படுகிறது. குப் பைத்தொட் டி தேவை
சுந்தரி, குடும்பத் தலைவி: நகரில் காலையில் மட்டும் தான் குப்பை வாங்க வண்டி வருகிறது' அவர்களும் ஒரு நாளுக்கு ஒரு தெருவிற்கு மட்டும் தான் வருகிறார். சின்ன வண்டி என்பதால் சீக்கிரமாக குப்பை நிறைந்து விடுகிறது. இதனால் காலியாக உள்ள இடத்தில் குப்பை கொட்டுகிறோம் இதனால் சுகாதாரக்கேடும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது ஆங்காங்கே குப்பைத்தொட்டி வைக்கவேண்டும். தாமிரபரணி குடிநீர் வழங்க வேண்டும்
பேச்சியப்பன், குடும்பத் தலைவர்: தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்கின்றனர். ஆனால் இந்த தண்ணீர் தாமிரபரணி தண்ணீர் இல்லை. உள்ளூர் தண்ணீர் என்பதால் உப்புச் சுவையாக உள்ளது. ஒரு நாள் தாமிரபரணி தண்ணீர் மறுநாள் உள்ளுர் தண்ணீர் என்று வினியோகம் செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும்
கனகராஜ், ஊராட்சித் தலைவர், அயன்சத்திரப்பட்டி: தற்போது மண் ரோடுகள் சிமிண்ட், தார்சாலையாக போடப்பட்டுள்ளது. ஆனந்த நகரில் பெரும்பாலான தெருக்களில் ரோடு வசதியுள்ளது. வாறுகால் கட்டித் தந்தோம் ஆனால் இதில் வீட்டுக்காரர்கள் மணல் கொட்டி அடைத்து விட்டனர். விரைவில் அனைத்து தெருக்களிலும் ரோடு போடப்படும் என்றார்.
15 hour(s) ago
15 hour(s) ago