உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வைகை, பொதிகை உள்ளிட்ட ரயில்கள் மேல்மருவத்துாரில் நின்று செல்லும்

 வைகை, பொதிகை உள்ளிட்ட ரயில்கள் மேல்மருவத்துாரில் நின்று செல்லும்

விருதுநகர்: இருமுடி, தைப்பூசம் திருவிழாக்களை முன்னிட்டு மேல்மருவத்துாரில் வைகை, பாண்டியன், பொதிகை உள்ளிட்ட பல்வேறு ரயில்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக நிறுத்தம், பிப்., வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, மதுரை --சென்னை எழும்பூர் -- மதுரை வைகை', பாண்டியன்', செங்கோட்டை -- எழும்பூர் -- செங்கோட்டை பொதிகை', கொல்லம் -- எழும்பூர் -- கொல்லம், தாம்பரம் -- ராமேஸ்வரம் -- தாம்பரம் (16103/16104), தாம்பரம் -- நாகர்கோவில் -- தாம்பரம் அந்தியோதயா' ஆகிய ரயில்கள் பிப். 2 வரை நின்று செல்லும். குமரி -- நிஜாமுதீன் பிப்.,1 வரை, நிஜாமுதீன் --குமரி ஜன.,31 வரை, மதுரை -- நிஜாமுதீன் ஜன., 27 வரை, நிஜாமுதீன் -- மதுரை ஜன., 29 வரை, எழும்பூர் -- நாகர்கோவில் ஜன., 29 வரை, நாகர்கோவில் -- எழும்பூர் ஜன.,30 வரை, குமரி -- பனாரஸ் பிப்., 2 வரை, பனாரஸ் -- குமரி பிப்., 1 வரை நின்று செல்லும். செங்கோட்டை -- எழும்பூர் -- செங்கோட்டை சிலம்பு' பிப்., 1 வரை, செங்கோட்டை -- தாம்பரம் ஜன., 30 வரை, லோக்மான்யா திலக் -- மதுரை ஜன., 28 வரை, மதுரை -- லோக்மான்யா திலக் ஜன., 30 வரை, எழும்பூர் -- மதுரை மஹால்' பிப்., 1 வரை, மதுரை -- எழும்பூர் மஹால்' ஜன., 31 வரை நின்று செல்லும். தாம்பரம் -- நாகர்கோவில் பிப்., 2 வரை, நாகர்கோவில் -- தாம்பரம் ஜன., 29 வரை, மதுரை -- பிகானிர் ஜன., 29 வரை, பிகானிர் -- மதுரை ஜன., 25 வரை, ராமேஸ்வரம் அயோத்தியா கன்டோன்மென்ட் பிப்.,1 வரை, அயோத்தியா கன்டோன்மென்ட் -- ராமேஸ்வரம் ஜன., 28 வரை நின்று செல்லும். ராமேஸ்வரம் -- பனாரஸ் ஜன.,28 வரை, பனாரஸ் -- ராமேஸ்வரம் ஜன., 25 வரை, புவனேஸ்வர் -- ராமேஸ்வரம் ஜன.,30 வரை, ராமேஸ்வரம் -- புவனேஸ்வர் பிப்.,1 வரை நின்று செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை