உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வீரசோழன் சார்பதிவாளரிடம் கணக்கில் வராத ரூ.3 லட்சம்

 வீரசோழன் சார்பதிவாளரிடம் கணக்கில் வராத ரூ.3 லட்சம்

நரிக்குடி: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வீரசோழன் சார் பதிவாளர் அசோக்குமார் 44, காரில் இருந்து கணக்கில் வராத ரூ. 3 லட்சத்து 24 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். வீரசோழன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அசோக்குமார் சார் பதிவாளராக 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். பத்திரப்பதிவுக்கு அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் முத்துமாரி, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை பணி முடித்து அசோக்குமார் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் காரை வழிமறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். காரிலிருந்த பையில் ரூ. 3 லட்சத்து 24 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டது. பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் கணக்கில் வராத பணம் என தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ