உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வனங்களில் தண்ணீர் தட்டுப்பாடு கண்காணிப்பு தேவை

வனங்களில் தண்ணீர் தட்டுப்பாடு கண்காணிப்பு தேவை

ராஜபாளையம்:மேற்கு தொடர்ச்சி மலையில் பருவமழை இல்லாததால், குடிநீருக்காக விலங்குகள் மலையடிவாரத்திற்கு வரும் வாய்ப்பு உள்ளது. வன விலங்குகளை வேட்டையாடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.தென்மேற்கு பருவமழையில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஜூன் முதல் மூன்று மாதங்களுக்கு மழை பெய்யும். மலையடிவாரத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் குற்றாலம் போல சீசன் இருக்கும். பருவமழையால் ராஜபாளையத்தின் குடிநீர் தேவை பூர்த்தி ஆகும். இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் போதிய மழை பெய்யவில்லை. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட இந்த மலையில் உள்ள சாம்பல் நிற அணில் சரணாலய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.இங்கு யானை, சிறுத்தை புலி, காட்டு மாடு, கரடி, மான் போன்ற விலங்குகள் உள்ளன. இவை மாம்பழ சீசனில் மலையடிவாரத்தில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் தோப்புகளுக்கு வந்து செல்லும். இங்கு உணவுகளை சாப்பிட்டு, ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் குடிநீர் குடிக்கும்.தற்போது மழை இல்லாததால், உணவு மற்றும் குடிநீர் தேடி மலையடிவாரத்திற்கு விலங்குகள் வரும் வாய்ப்பு உள்ளது.விலங்குகளை வேட்டையாடும் கும்பல் இதை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. மலையடிவாரப்பகுதியில் கண்காணிப்பை வனத்துறையினர் தீவிரப்படுத்தவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ