உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முயல் விற்ற 6 பேர் கைது

முயல் விற்ற 6 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்:காரியபாட்டி அருகே காட்டு முயல்களை விற்பனை செய்தவர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் நேற்று கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அச்சம்பட்டி முள்புதர்களில் முயல்கள் வேட்டையாடப்படுகின்றன. வேட்டை கும்பல், ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் காரியாபட்டியில் முயல் விற்பனையில் ஈடுபடுகின்றன என தகவல்கள் கிடைத்தன. இந்த கும்பலை பிடிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் ரேஞ்சர் பழனிவேல்ராஜ் மற்றும் வனத்துறையினர், நேற்று காரியாபட்டி சென்றனர். மார்கெட் அருகே 26 முயல்களை ஒரு கும்பல் விற்றுகொண்டு இருந்தது. இதில் 10 முயல்கள் உயிருடன் இருந்தன. முயல்வேட்டையாடி, விற்க முயன்றதாக அச்சம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி,30. குருசாமி,30. சந்தானம்,35. அழகர்,30. மற்றொரு அழகர்,23. மற்றும் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். உயிருடன் இருந்த முயல்களை மேற்கு தொடர்ச்சி மலையில் வனத்துறையினர் விட்டனர். மற்றவை புதைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை