உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் பட்டாசு விபத்துவாலிபர் பலி: ஒருவர் காயம்

சாத்துாரில் பட்டாசு விபத்துவாலிபர் பலி: ஒருவர் காயம்

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த அஜித், 23, வெடி விபத்தில் சிக்கி பலியானார். விருதுநகர் அருகே பாவாலியில் பதுக்கிய பட்டாசு மூலப்பொருள் வெடித்து சின்னராஜா 27, காயமடைந்தார்.சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் அஜித், 23. அரசு அனுமதி இன்றி பெத்துரெட்டி பட்டி அருகே சின்னக் கொல்லப்பட்டி காட்டுப் பகுதியில் கிணற்று மோட்டார் ரூமில் சோல்சா பட்டாசு வெடி தயாரித்துள்ளார்.நேற்று காலை 10:00 மணியளவில் பட்டாசுக்கு மருந்து செலுத்தும் பணியில் அஜித் ஈடுபட்ட போது திடீரென உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி அவர் உடல் சிதைந்து பலியானார்.சாத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்து அவரது உடலை மீட்டனர்.

மற்றொரு விபத்தில் ஒருவர் காயம்

விருதுநகர் அருகே பாவாலியைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டின் அருகே தகர ெஷட்டில் சட்ட விரோதமாக சரவெடி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தார். இந்த வீட்டில் வாடகைக்கு அதே பகுதியைச் சேர்ந்த சின்னராஜா வசித்து வருகிறார். இவர் தகர செட்டின் அருகே மிஷினால் கம்பியை கட்டிங் செய்த போது ஏற்பட்ட தீப்பொறியால் பதுக்கி வைத்திருந்த பட்டாசு மூலப்பொருட்கள் வெடித்து தகர செட் இடிந்து விழுந்தது.இதில் காயமடைந்த சின்ன ராஜா விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செல்வம் மீது ஆமத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ