மேலும் செய்திகள்
ஆராய்ச்சிக்குப்பம் - பாகூர் இடையே இலவச வாகன சேவை இயக்கம்
15 hour(s) ago
மணல் சிற்ப கண்காட்சி
15 hour(s) ago
வாக்குறுதி திட்டங்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு
17 hour(s) ago
மூணாறு : பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து,இடது சாரி கூட்டணி சார்பில்,கேரளாவில் நாளை ( செப் 19) மாநிலம் தழுவிய 'பந்த்' நடக்கிறது. கேரளாவில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, இடது சாரி கூட்டணி கட்சியினரும்,இளைஞர் அமைப்பினரும்,பல்வேறு அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.மூணாறில் கேரளா கத்தோலிக்க சபையின் இளைஞர் அமைப்பினர், பின் நோக்கி நடந்து சென்றும்,வாகனங்களை பின் நோக்கி தள்ளிச் சென்றும் நூதன போராட்டம் நடத்தினர்.இதையடுத்து தபால் அலுவலம் அருகில் கண்டன கூட்டம் நடந்தது. இளைஞர் அமைப்பின் மாநில பொருளாளர் வினோத்,பாதிரியார்கள் பிரான்சிஸ், ஜூபிஜார்ஜ், தாமஸ்குரியன், அவுசேப் உட்பட பலர் பங்கேற்றனர். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மோட்டார் வாகன தொழிலாளர் கூட்டமைப்பினர்,மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இந்நிலையில் பொட்ரோல் விலை உயர்வை கண்டித்து இடது சாரி கூட்டணி சார்பில், நாளை (செப்.,19ல்) மாநிலம் தழுவிய 'பந்த்' நடத்த முடிவு செய்துள்ளதாக, கூட்டணியின் மாநில கன்வீனர் வைக்கம் விஸ்வம் தெரிவித்துள்ளார்.இதே கோரிக்கையை வலியுறுத்தி பாரதிய ஜனதாவும் நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.
15 hour(s) ago
15 hour(s) ago
17 hour(s) ago