உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆற்று மணலை பதுக்கியதி.மு.க., பிரமுகர் கைது

ஆற்று மணலை பதுக்கியதி.மு.க., பிரமுகர் கைது

கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆற்று மணலை பதுக்கியதற்காக தி.மு.க., மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பாண்டி கைது செய்யப்பட்டார். ஓ.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., தொண்டரணி அமைப்பாளர். கோவிலாங்குளம், தோப்படைப்பட்டி ஆற்றில் இருந்து அள்ளிய 20 டன் மணலை, ஓ.கரிசல்குளம் கண்மாய் இரண்டாவது மடையில் பதுக்கி வைத்திருந்தார். இன்றுரோந்துப்பணியில் கமுதி டி.எஸ்.பி., சீனிவாசபெருமாள் ஈடுபட்டிருந்தார். அப்போது கண்மாய் மடையில் பதுக்கி வைத்திருந்ததாக பாண்டியை பிடித்து கோவிலாங்குளம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். வி.ஏ.ஓ., வாகைப்பாண்டியன் புகார்படி, பாண்டியை, கோவிலாங்குளம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை