உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஞ்சிபுரம் அருகே பெண் கொலை

காஞ்சிபுரம் அருகே பெண் கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டிசத்திரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சித்ரா. இவர்களது மகள் ராஜேஸ்வரி. இவர்களின் வீட்டின்மாடியில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வித்யா சேகர் மற்றும் அவரது மனைவி ஸ்ரீஜா ஆகியோர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். சம்பவத்தன்று பிரபாகரன் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார்.இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து சித்ராவை கயிற்றால் கட்டி வாயில் துணியை திணித்து அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துடன் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிச் சென்றுள்ளனர். பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த ராஜேஸ்வரி தாயை காணாதது குறித்து தேடியுள்ளார். பின்னர் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது சித்ரா மூச்சுத்திணறி இறந்திருப்பதை கண்டறிந்தனர். இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் வாடகைக்கு குடியிருந்த தம்பதிகளும் தலைமறைவானதால் இச்சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை