மேலும் செய்திகள்
பழமையான தவ்வை சிற்பம்; கோட்டக்குப்பம் அருகே கண்டுபிடிப்பு
14 hour(s) ago
தினமலர் வித்யாரம்பம்; விருத்தாசலத்தில் கோலாகலம்
15 hour(s) ago
மேட்டூர்: மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை தொடர்ந்து, விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளதால் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்த டெல்டா நீர்திறப்பு செப்., 7ம் தேதி விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்வதால் பாசனத்துக்கான நீர் தேவை குறைந்துள்ளது. அதனால், விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்த டெல்டா நீர்திறப்பு நேற்று மதியம் 12 மணி முதல் விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 95.080 அடியாகவும், நீர் இருப்பு 58.650 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. விநாடிக்கு 11 ஆயிரத்து 732 கனஅடி நீர் வந்தது.
14 hour(s) ago
15 hour(s) ago