உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழக உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை மாநில தேர்தல் வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 1 லட்சத்து 12 ஆயிரத்து 697 பதவியிடங்களுக்கு 4 லட்சத்து 11 ஆயிரத்து 177 பேர் போட்டியிடுகின்றனர். 5 லட்சத்து 27 ஆயிரத்து 875 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததில், 10 ஆயிரத்து 76 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 86 ஆயிரத்து 983 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். 57 இடங்களுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை