உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நேரத்தில் 10 கல்லுாரிகளில் பணியாற்றிய 189 பேராசிரியர்கள்

ஒரே நேரத்தில் 10 கல்லுாரிகளில் பணியாற்றிய 189 பேராசிரியர்கள்

சென்னை : இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 189 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில், 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றி மோசடி செய்தது கண்டறியப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பில், 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங், 'ஆர்கிடெக்ட்' கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 433 கல்லுாரிகள், இந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளன. இந்த கல்லுாரிகள், அண்ணா பல்கலையில் இணைப்பு அந்தஸ்தும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரமும் பெற்றிருக்க வேண்டும்.அங்கீகாரம் பெற, ஒவ்வோர் ஆண்டும் தங்கள் கல்வி நிறுவன விபரங்களை, தாக்கல் செய்ய வேண்டும். அதில், கட்டட உறுதித்தன்மை, பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு சான்றளிக்க வேண்டும்.மேலும், கல்லுாரி வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களின் விபரங்களை, தாக்கல் செய்ய வேண்டும்.இந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து, அண்ணா பல்கலை குழுவினர், நேரடியாக கல்லுாரிகளில் ஆய்வு செய்வது வழக்கம்.இந்நிலையில், 'அறப்போர் இயக்கம்' சார்பில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம், நேற்று முன்தினம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 353 பேராசிரியர்கள் போலியாக ஆவணங்களை சமர்ப்பித்து, 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.இந்தப் புகார் தொடர்பாக, அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் தலைமையிலான குழுவினர் விசாரித்துள்ளனர்.இதுகுறித்து, துணை வேந்தர் அளித்த பேட்டி:அறப்போர் இயக்கம் அளித்த புகாரின்படி, பேராசிரியர்களின் ஆதார் எண், பெயர், பிறந்த தேதி விபரங்களை ஆய்வு செய்தோம். இதில், ஆதார் எண் அடிப்படையில், எந்த முரண்பாடும் தெரியவில்லை. ஆனால், 2000 ஆசிரியர்களின் பணியிடம் பற்றாக்குறையாக இருந்தது தெரியவந்தது.பின், எங்கள் தரவுகளில் உள்ள பேராசிரியர்களின் பிறந்த தேதி, பெயர், ஆதார் எண் ஆகிய மூன்றையும் பொருத்திப் பார்த்ததில், 189 பேர் தங்கள் ஆதார் எண்ணை மட்டும் மாற்றி பதிவு செய்து, ஒரே நேரத்தில், பல கல்லுாரிகளில் பணியில் இருப்பதுபோல், மோசடி செய்தது தெரியவந்துள்ளது.மொத்தம், 52,500 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 2000 ஆசிரியர் பணியிடங்களை, 189 பேர் தங்களின் பிடியில் வைத்துள்ளனர். இவர்களில் ஒருவர், 32 கல்லுாரிகளில் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய மோசடி. இதில் ஈடுபட்டவர்கள் மீதும், போலி ஆவணங்களை பயன்படுத்தி, பேராசிரியர்கள் விபரத்தை தாக்கல் செய்த கல்லுாரிகள் மீதும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

றிஷி
ஜூலை 25, 2024 16:24

ஆஹா அருமை... திருட்டுக் கயவர்களை உற்பத்தி செய்யும் அருமையான கல்வித்திட்டம்... வேற யாரு, திருட வந்த நம்ம வெள்ளையன் எழுதினதுதான்... பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் நாட்டில் இருந்த கல்வி முறை பண்பட்ட மனிதர்களை உருவாக்குவது....


ராம்கி
ஜூலை 25, 2024 16:21

ஆக தமிழ்நாட்டில் தொழிற்கல்வி கற்றுத்தர தரமான ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு என தெரிகிறது. நல்ல சம்பளம் தந்தால் திறமையான ஆசிரியர்கள் கிடைப்பார்கள். ₹.1௦௦௦௦- அல்லது ₹.௨௦௦௦௦- க்கு எப்படி தரமான ஆசிரியர்கள் வேலைக்கு கிடைப்பார்கள். தரமற்ற ஆசிரியர்களால் மாணவர்களின் அறிவும், எதிர்கால வாழ்கையும் கேள்விக்குறியாகி விட்டது.


SATVIK COOKING
ஜூலை 25, 2024 13:38

அட கடவுளே


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 13:09

தமிழன் டா..


Sriraman Ts
ஜூலை 25, 2024 12:17

Engineering college teachers fraud_shame on govt


பாமரன்
ஜூலை 25, 2024 12:04

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் விசிட்டிங் வாத்தியார் அனுமதி உண்டு. அங்கே சட்டப்பூர்வமான நடைமுறையில் செய்கிறார்கள். தம் நாட்டிலும் உண்டு... ஆனால் இங்கே நடந்திருப்பது அப்பட்டமான விதிமீறல் மற்றும் வரி ஏய்ப்பு. பொறியியல் கல்லூரிகளை கண்கானிக்க ஐகிட்டே AICTE இருக்கிறது. அய்யா பகோடாஸ் அது தனிப்பட்ட அமைப்புன்னு சொம்பு தூக்கிட்டு வராதீங்க... இந்த மாதிரி நபர்களுக்கு சம்பளம் தந்ததா கணக்கு எழுதி வரி ஏய்த்தவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு சுவரேறி குதித்து எதிரி கட்சியின் ஆட்களை மட்டுமே புடிக்கும் ஐடி சிபீபீபீபீ இடி மாதிரி மத்திய ஏஜென்சிகளுக்கும் உண்டு


நிக்கோல்தாம்சன்
ஜூலை 25, 2024 11:54

இதனை எப்படி infrastructure கூட ஒப்புமைப்படுத்தி பார்க்கிறீர்கள் ? மனிதவளம் வேறு infra வேறு என்பதனை எப்போது உணருவீர்கள் ஐயா ?


M S RAGHUNATHAN
ஜூலை 25, 2024 11:20

இதை விட ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் இருக்கு. திராவிட ஆட்சியில். 1. 1969 ஏப்ரல் மாதத்தில் இருந்து 1973 வரை சென்னை மாநகராட்சியின் Muster Roll ஊழல் மிக பிரசித்தம். இதில் கவனிக்க வேண்டியது 1969 பிப்ரவரி மாதத்தில் இருந்து முதல்வர் ஆக இருந்தவர் மறைந்த கருணாநிதி அவர்கள். 2. வேலூர் அரசு மருத்துவமனைக்கு அரசு மருத்துவர்கள் மாற்றப் பட்டனர். அதில் பலர் தினமும் காலையில் வேலூர் சென்று மருத்துவ மனையில் கை எழுத்து போட்டு விட்டு உடனே சென்னை திரும்பி அவர்கள் சொந்த கிளினிக்கில் வேலை பார்த்தனர். துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்று யாருக்கும் தெரியாது. 3. பதிவுத்துறை அலுவலகத்தில் பினாமி வேலையாட்கள் வேலை பார்த்த விஷயமும் உண்டு. 4. 100. நாள் வேலை திட்டத்தில் இயந்திரங்கள் பயன் படுத்தக் கூடாது என்பது விதி. ஆனால் ஜேசிபி போன்ற இயந்திரங்கள் மாவட்ட நிர்வாகத்திற்க்கு தெரிந்தே பயன் படுத்தப் பட்டது. பல பயனாளிகள் போலி என்பதும் தெரியும் நிர்வாகத்திற்க்கு. சுருக்கமாக திராவிடம் என்றால் பொய், பித்தலாட்டம், ஊழல் என்பது வெட்ட வெளிச்சம்.


Tirunelveliகாரன்
ஜூலை 25, 2024 11:06

எல்லா பின்னூட்டங்களையும் கருத்துக்களையும் பார்க்கும் பொது செய்தி என்ன என்பதே யாருக்கும் தெரியவில்லை. இது தான் நம் புரிதலின் லட்ச்சனம். இது infrastructure காண்பிப்பது. ஏறக்குறைய எல்லா தனியார் கல்லூரிகளும் இதைத்தான் செய்கின்றன. not only teachesrs all infrastuctures


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 10:45

இந்த அழகில் எங்கோ நடந்த நீட் கசிவு பற்றி இங்கு விவாதங்கள். நமது முதுகிலேயே ஏராள அழுக்கு.


Tirunelveliகாரன்
ஜூலை 25, 2024 11:01

நீட் மோசடி என்பது மிகப்பெரிய மோசடி அதையும் இவர்கள் infrstructure காண்பிப்பதையும் எவ்வாறு சாப்பிடுகிறீர்கள். என்ன செய்தி ன்பதாவது உங்களுக்கு விளங்குகிறதா இல்லையா?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை