உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டியலின பெண்களை தாக்கிய தி.மு.க., நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு

பட்டியலின பெண்களை தாக்கிய தி.மு.க., நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ஈரோடு அரச்சலூரில் குடிநீர் வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய பட்டியலின பெண்களை தி.மு.க., பஞ்சாயத்து தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தடுக்க முயன்ற பெண்ணின் மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தங்க தமிழ்ச்செல்வன் மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் பூந்துறை சேமூர் ஊராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யாதது குறித்து மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் மணிகண்டனின் தாய் மற்றும் மனைவி ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்த போது தி.மு.க ஊராட்சி தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் திட்டி தாக்கி உள்ளார். இவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். தடுக்க முயன்ற பெண்ணின் மகனை, தங்க தமிழ்ச்செல்வன் தனது காரில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட முயற்சி செய்துள்ளார். இதனால் தங்க தமிழ்ச்செல்வன் மீது தகாத வார்த்தைகளால் திட்டுவது, கையால் தாக்குவது, ஆயுதங்களால் தாக்குவது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Jebamani Mohanraj
ஜூன் 23, 2024 22:00

குண்டர் சட்டத்தில் போடவேண்டும்


கௌதம்
ஜூன் 23, 2024 20:02

சமூகநீதியை குத்தகைக்கு எடுத்து காப்பாற்றும் திமுக


M Ramachandran
ஜூன் 23, 2024 19:44

இதெல்லாம் சகஜமப்பா திரு மா தலையிட்டு காப்பாற்றிவிடுவார். அவ்வளவு விசுவாசம்


raja
ஜூன் 23, 2024 17:47

நம்புங்க திராவிட சமூக நீதி காப்பவங்க


rama adhavan
ஜூன் 23, 2024 17:41

திருமா வாயை திறக்க மாட்டார்.. மாட்டார். கூட்டணி தர்மம் குறிக்க்கிடுமே?


Rajagiri Apparswamy
ஜூன் 23, 2024 17:31

தி மு க கூட்டணியில் உள்ள வரை இது மாதிரியான சம்பவங்கள் தொடரும்


Kasimani Baskaran
ஜூன் 23, 2024 17:29

உண்மை முகம் இதுதான். வேங்கை வயலில் வெளிப்பட்டும் கூட பல அறிவாளிகள் மரண உருட்டு உருட்டி பட்டியலினத்தவர்களை திசை திருப்ப முயன்று வருகிறார்கள்.


M Ramachandran
ஜூன் 23, 2024 20:07

எது அடைந்தாலும் பூனை திரு மா கண்னை மூடிக் தூங்குவது போல் பாவ்லா கொண்டிருக்கும்


ஆரூர் ரங்
ஜூன் 23, 2024 16:51

எந்தக் கொம்பனாலும்.... ஒண்ணும் செய்ய முடியாதே.


Velan
ஜூன் 23, 2024 16:40

வழக்கெல்லாம் பேருக்கு தான் அந்த நபரை ஒன்றும் செய்யாது. ஏன்னா அவர் தி.மு.க


G Mahalingam
ஜூன் 23, 2024 16:36

இதுவே அதிமுக பாஜகவினர் என்றால் கைது செய்து இருப்பார்கள். வழக்கு குப்பையில் போட வேண்டியது தான். அடுத்த அதிமுக ஆட்சியில் தூசி தட்டபடும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை