உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய இந்துவாரியம் அமைக்க வேண்டும்: உலக சித்தர்கள் சர்வ சமய கூட்டமைப்பு வலியுறுத்தல்

தேசிய இந்துவாரியம் அமைக்க வேண்டும்: உலக சித்தர்கள் சர்வ சமய கூட்டமைப்பு வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரம்பலுார்:இந்து கோயிலையும் கோயில் சொத்துக்களை பாதுகாப்பதற்கும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தெய்வ திருமேனிகளை மீட்பதற்கும் இந்துக்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதற்கும் தேசிய இந்துவாரியம் அமைக்கப்பட வேண்டும் என உலக சித்தர்கள் சர்வ சமய கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவயோகி அனுகூலநாத ராஜசேகரன் தெரிவித்தார். பெரம்பலுாரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:இந்து கோயிலையும், கோயில் சொத்துக்களை பாதுகாப்பதற்கும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தெய்வ திருமேனிகளை மீட்பதற்கும், இந்துக்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதற்கும், தேசிய இந்து வாரியம் அமைக்கப்பட வேண்டும். திருவண்ணாமலை சுற்றியுள்ள கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முழுவதுமாக கிரிவல பாதைக்கான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பேருந்துகள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்லுகின்ற சாலை போக்குவரத்தில் கிரிவலப் பாதை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை. விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கிரிவலப் பாதை பக்தர்களின் பயன்பாட்டிற்கு மட்டும் வர வேண்டும் என்பது பக்தர்களின் கருத்து. தேர் திருவிழாக்களில் தேரோடும் வீதிகளில் தரமான சாலைகள் அமைத்து தேர் தடவாளங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு தேர் திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். கோயில் திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகத்தில் பெரும்பாலான நிதி பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. அதற்கு முறையான ரசீதுகள் வழங்கப்பட வேண்டும். திருப்பணிகள் செய்வதிலும் கும்பாபிஷேகம் செய்வதிலும் கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஒருவேளை அன்னதானத் திட்டத்தில் வசூலிக்கப்படும் நிதியை முறைப்படுத்தி திட்டத்தை விரிவுபடுத்த முயற்சி செய்ய வேண்டும். கட்டணமில்லா தரிசனத்தை கட்டாயமாக்கப்பட வேண்டும். ஒரு கால பூஜை கூட நடக்காத கோயிலில் பூஜைகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கோயிலில் பணி செய்யும் ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சிவாலயங்களில் சிவனடியார்கள் முற்றோதல் செய்வதற்கும், உழவாரப்பணி செய்வதற்கும் மறுப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

V RAMASWAMY
ஜூலை 08, 2024 11:49

வரவேற்கத்தக்க மிகவும் அவசியமான யோசனை. அனைத்து இந்து மதம் சார்ந்த அமைப்புக்கள், மடங்கள், ஆதீனங்கள், இன்ன பிற ஒரே அமைப்பின் குடையின் கீழ் செயல்பட்டு, அதற்கு பா ஜ க போன்ற கட்சிகளின் ஆதரவுகளுடன் செயல்பட்டு, திராவிட சித்தாந்தங்கள், இந்து எதிர்ப்பு, கோயில், இந்து கடவுள், சனாதன எதிர்ப்பு இவற்றை அறவே ஒழிக்க பாடுபடவேண்டும். தேவைப்பட்டால், வட மாநில இந்து அமைப்புக்களின் ஆதரவையும் பெறலாம். இன்றைய கால கட்டத்தில் இது மிகவும் முக்கியம், அவசியம்.


R.P.Anand
ஜூலை 06, 2024 18:00

ஐயா தங்களின் கருத்து மிக முக்கியமானது . முதலில் அனைத்து மடாதிபத்திகளையும் ஓருங்கிணைத்து அதில் ஒருவரை தலைமைக்கு தேர்ந்தெடுத்து . குழு அமைத்து சிறப்பாக நடத்தவேண்டும் . குழுவில் ஆன்மீக பெரியோர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நீதியரசர்கள் மற்றும் ஆன்மீக டிரஸ்ட்கள் உடன் இருக்க வேண்டும் .


Rama
ஜூலை 06, 2024 01:28

சரியான நிலைப்பாடு. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.


Sivagiri
ஜூலை 05, 2024 22:23

கரெக்ட் . , மத்திய அரசு , கல்வி துறையை போல ஹிந்து அறநிலையத்துறையை தேசிய பொது பட்டியலில் கொண்டு வந்து மத்திய ஹிந்து அறநிலைய துறை ஒன்றை உருவாக்கி , அனைத்து மாநில ஹிந்து அறநிலைய துறைகளையும் , கோவில்களையும் நிர்வாகத்தையும் ஒழுங்கு படுத்த வேண்டியது அவசியம் , அவசரம்


venugopal s
ஜூலை 06, 2024 13:17

கடந்த பத்து ஆண்டுகளாகவும், இப்பொழுதும் மத்தியில் பாஜக தானே ஆட்சியில் உள்ளது. ஹிந்துக்களின் மீது உண்மையிலேயே அக்கறை உள்ள கட்சியாக இருந்தால் பாஜக அதை செய்து காட்டி நிரூபிக்கலாமே! ஏன் செய்ய வில்லை?


sankaranarayanan
ஜூலை 05, 2024 20:26

எல்லா மதத்திற்கும் இருப்பது போன்று இந்து மதத்திற்கும் தேசிய இந்து வாரியம் அமைக்கப்பட வேண்டும் சரியான முயற்சி ஆரம்பம் ஆகட்டும்.


குமரன்
ஜூலை 05, 2024 20:21

நல்ல திட்டமிடல் மற்றும் முயற்சி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்


Yes
ஜூலை 05, 2024 20:07

சித்தர்கள் சர்வ சமய கூட்டமைப்பு.இதில் சர்வ சமயம் எங்கே வந்தது.சித்தர்களின் பிறப்பிடம் இந்து சமயம் ஒன்றே.மற்ற மதங்களில் சித்தர்கள் கிடையாது


kumarkv
ஜூலை 05, 2024 22:39

மற்ற மதங்களில் பிச்சை எடுக்கிறவங்கதான் இருக்காங்க


Yes
ஜூலை 05, 2024 20:04

சித்தர்கள் தேசிய இந்து சமய கூட்டமைப்பு இப்போது வலியுறுத்துவது மிக முக்கியமான காலத்தின் கட்டாயம்.


KRISHNAN R
ஜூலை 05, 2024 19:52

நல்ல முயற்சி. ஆனால்..சித்தர்கள்.... என்று மக்கள் தானே ஒருவரை அடையாளம். கட்டுவார்கள்......?????


Marimuthu Kaliyamoorthy
ஜூலை 05, 2024 19:52

VERY ESSENTIAL. SHOULD BE FORMED.


மேலும் செய்திகள்