உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பீதிக்கு உள்ளாக்கிய சிறுத்தை சிக்கியது

பீதிக்கு உள்ளாக்கிய சிறுத்தை சிக்கியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூடலுார்: நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை அருகே, பொன்வயல், பாலம் வயல் பகுதியில் நடக்க சிரமப்பட்ட நிலையில், சிறுத்தை உலா வருவதை பார்த்த மக்கள் பீதியடைந்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டு இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி, சிறுத்தையை பிடிக்க இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டன. அதில் ஒன்றில், நேற்று, அதிகாலை சிறுத்தை சிக்கியது. எனினும், அந்த சிறுத்தை ஆக்ரோஷமாக காணப்பட்டது.முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார், சிறுத்தையின் உடல் நிலையை ஆய்வு செய்து, ஆரோக்கியமாக இருப்பதாகவும், சில இடங்களில் சிறிய காயங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். பின், சிறுத்தையுடன் கூண்டு, லாரியில் ஏற்றப்பட்டு, முதுமலை புலிகள் காப்பகம் எடுத்து சென்று, மசினகுடி வனப்பகுதியில் விடுவித்தனர்.இதேபோல, பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் கட்டைக்கொம்பன் மற்றும் புல்லட் என்று அழைக்கப்படும் இரண்டு ஆண் யானைகள், ஒன்றாக சேர்ந்து சுற்றி வருகின்றன. பகல் நேரங்களில் குடியிருப்புகளை ஒட்டிய புதர் பகுதிகளில் ஓய்வெடுக்கும் இந்த யானைகள், இரவில் மக்களை அச்சுறுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. வனக்குழுவினர் அந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை