சென்னை:பிளஸ் 1 பொதுத்தேர்வில், 91.17 சதவீதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவியர் அதிக தேர்ச்சி பெற்று உள்ளனர். 241 அரசு பள்ளிகள் உட்பட, 1,964 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.தமிழகத்தில், 8 லட்சத்து 11,172 பேர், பிளஸ் 1 தேர்வு எழுதினர். இவர்களில், 7 லட்சத்து 39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம். இதில், மாணவியர் தேர்ச்சி விகிதம் 94.69; மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.26; கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.24 சதவீதம் அதிகரித்துள்ளது. பள்ளிகள்
மொத்தம் 7,534 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், 241 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, 1,964 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன. அரசு பள்ளிகள் 85.75; அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36; தனியார் சுயநிதி பள்ளிகள் 98.09; இருபாலர் பள்ளிகள் 91.61; பெண்கள் பள்ளிகள் 94.46; ஆண்கள் பள்ளிகள் 81.37 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பாடங்கள்
இயற்பியலில் 97.23; வேதியியலில் 96.20; உயிரியலில் 98.25; கணிதத்தில் 97.21; தாவரவியலில் 91.88; விலங்கியலில் 96.40; கணினி அறிவியலில் 99.39; வணிகவியலில் 92.45; கணக்குப் பதிவியலில் 95.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில், கோவை முதலிடம் பெற்றுள்ளது. இம்மாவட்டத்தில் 96.02 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, ஈரோட்டில் 95.56; திருப்பூரில் 95.23 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அரசு பள்ளிகளில், அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 92.86 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அரியலுாரில் 92.59; திருப்பூரில் 92.06 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக வேலுாரில், 81.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நுாற்றுக்கு நுாறு
பிளஸ் 1 தேர்வில், 8,418 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3,432; கணிதத்தில் 779; பொருளியலில் 741; இயற்பியலில் 696; வணிகவியலில் 620; வேதியியலில் 493; கணக்குப் பதிவியலில் 415; வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியலில் 293; கணினிப் பயன்பாடுகளில் 288; உயிரியலில் 171; விலங்கியலில் 29; ஆங்கிலத்தில் 13; தமிழில் 8; தாவரவியலில் 2 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மொழிப்பாடத்தில் தோல்வி
பிளஸ் 1 பொதுத்தேர்வில், ஆங்கிலம் தவிர்த்து, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களில், 34,737 பேர் தோல்வி அடைந்து உள்ளனர். மொத்தம் 8.11 லட்சம் பேர், தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடத்தேர்வு எழுதினர். இவர்களில், 7.76 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.72 சதவீதம்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம்
மாவட்டம் சதவீதம்கோவை 96.02ஈரோடு 95.56திருப்பூர் 95.23விருதுநகர் 95.06அரியலுார் 94.96பெரம்பலுார் 94.82சிவகங்கை 94.57திருச்சி 94.00கன்னியாகுமரி 93.96துாத்துக்குடி 93.86திருநெல்வேலி 93.32தென்காசி 93.02ராமநாதபுரம் 92.83நாமக்கல் 92.58கரூர் 92.28மதுரை 92.07சென்னை 91.68நீலகிரி 91.37சேலம் 91.30நாகப்பட்டினம் 91.09கடலுார் 91.01செங்கல்பட்டு 90.85தர்மபுரி 90.49தேனி 90.08திண்டுக்கல் 89.97விழுப்புரம் 89.41தஞ்சாவூர் 89.07திருவண்ணாமலை 88.91புதுக்கோட்டை 88.02ராணிப்பேட்டை 87.86கிருஷ்ணகிரி 87.82திருவாரூர் 87.15காஞ்சிபுரம் 86.98திருப்பத்துார் 86.88மயிலாடுதுறை 86.39கள்ளக்குறிச்சி 86.00திருவள்ளுர் 85.54வேலுார் 81.40*காரைக்கால் 96.27புதுச்சேரி 97.89
கடந்த ஆண்டுகளில்
தேர்ச்சி விகிதம்ஆண்டு சதவீதம்2020 96.042021 1002022 90.072023 90.932024 91.17
சிறைவாசிகள்
170 பேர் தேர்ச்சி!மாற்றுத்திறனாளி மாணவர்கள் 8,221 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினர். இவர்களில், 91.24 சதவீதமான, 7,504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 187 பேர் தேர்வு எழுதினர். அவர்களில், 90.90 சதவீதமான, 170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மறு கூட்டலுக்கு
இன்று விண்ணப்பம்* பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டல் கோரியும், இன்று காலை 11:00 மணி முதல், 20ம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல், மறு கூட்டல் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே, தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும்* பிளஸ் 1 துணைத் தேர்வு எழுத, பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியில், நாளை காலை 11:00 மணி முதல், ஜூன் 1 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களை, www.dge.tn.gov.inஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.