மேலும் செய்திகள்
கள்ள ஓட்டை தடுக்க கைரேகை பதிவு அவசியம்
2 hour(s) ago | 1
இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் போலீஸ்
2 hour(s) ago | 1
நீதிபதியை விமர்சித்தவருக்கு கிடைத்தது ஜாமின்
2 hour(s) ago | 2
சென்னை:'சிதம்பரம் நடராஜர் கோவிலில், பொது தீட்சிதர்கள் குழந்தை திருமணங்கள் செய்வது குறித்து புகார் அளித்தால், மாவட்ட சமூக நல அதிகாரி நடவடிக்கை எடுப்பார்' என, சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'சமீபத்தில், சிதம்பரம் நடராஜர் கோவிலில், 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு, திருமண ஏற்பாடுகளை தீட்சிதர் குழு செய்துள்ளது. இந்திய சட்டங்களையும் கலாச்சாரத்தையும், சிதம்பரம் பொது தீட்சிதர் குழு பொருட்படுத்துவது இல்லை. 'குழந்தை திருமணங்களை தடுக்க, அறநிலையத் துறை அதிகாரி, சமூக நலத் துறை அதிகாரி, கடலுார் கலெக்டர், எஸ்.பி., அடங்கிய நிரந்தர கண்காணிப்பு குழு நியமிக்க உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார்.இந்த வழக்கில், அறநிலையத் துறை செயலர், ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சி.கனகராஜ், அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜரானார்.அப்போது, 'ஏற்கனவே மாவட்ட சமூக நல அதிகாரி உள்ள நிலையில், இன்னொரு குழு எதற்கு?' எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'குழந்தை திருமணங்கள் குறித்து உடனே மாவட்ட சமூக நல அதிகாரியிடம் புகார் அளித்தால், அவர்கள் நடவடிக்கை எடுப்பர். இன்னொரு குழுவால், பிரச்னைக்கு தீர்வு காண முடியாது' என்ற நீதிபதிகள், தீட்சிதர்கள் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டனர். விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.
2 hour(s) ago | 1
2 hour(s) ago | 1
2 hour(s) ago | 2