உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடுதல், இணை இயக்குனர்கள் தீயணைப்பு துறையில் இல்லை

கூடுதல், இணை இயக்குனர்கள் தீயணைப்பு துறையில் இல்லை

சென்னை: தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில், அடுத்தடுத்து அதிகாரிகள் ஓய்வு பெற்றதால், கூடுதல் மற்றும் இணை இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில், நிர்வாகப்பிரிவு கூடுதல் இயக்குனர், செயலாக்கம் மற்றும் பயிற்சி பிரிவு கூடுதல் இயக்குனர் மற்றும் இணை, துணை இயக்குனர் பணியிடங்கள் உள்ளன. நிர்வாகப்பிரிவு கூடுதல் இயக்குனர் ஷாகுல் ஹமீது, சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்று விட்டார். செயலாக்கம் மற்றும் பயிற்சி பிரிவு கூடுதல் இயக்குனர் விஜயசேகர் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இணை இயக்குனராக பணியாற்றிய பிரியா ரவிச்சந்திரன், ஜனவரியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நியமிக்கப்பட்டு, விருது நகர் மாவட்டம், சிவகாசி சப் - கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். தற்போது தலைமையிடத்தில், இணை இயக்குனராக பணியாற்றி வரும் மீனாட்சி விஜயகுமார், அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார். இதுகுறித்து, தீயணைப்பு துறையினர் கூறியதாவது:இதற்கு முன், தீயணைப்பு வீரர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்கள் தான் நிரப்பப்படாமல் இருந்தன. தற்போது, தலைமையிடத்தில், கூடுதல் மற்றும் இணை இயக்குனர் பணியிடங்களே காலியாக உள்ளன. இதனால், முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ