உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காததால் தான் அ.தி.மு.க.,வுக்கு தோல்வி: மதுரை ஆதீனம்

பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காததால் தான் அ.தி.மு.க.,வுக்கு தோல்வி: மதுரை ஆதீனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: “அ.தி.மு.க., தன் கட்டமைப்பை மேம்படுத்தவில்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காததால் தான் அக்கட்சி தோல்வியை தழுவியது,” என, மதுரை ஆதீனம் கூறினார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமானவர்களும், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

எதையும் தாங்கும் இதயம்

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தாலேயே மத்தியில் காங்.,கால் ஆள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திரா பிரதமராக இருந்த போது தாரை வார்க்கப்பட்ட நம் பகுதியான கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் மீன்வளம் அதிகரிக்கும்.பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. எதையும் தாங்கும் இதயம் கொண்டவர் அவர். பா.ஜ., பெரும்பான்மைக்கும் குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அக்கட்சியை தோல்வி அடைந்ததாக விமர்சிக்கின்றனர்.ஒருவேளை பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தால், பட்டனை அழுத்தியவுடன் தாமரைக்கு ஓட்டு விழுந்தது; அதனாலேயே அக்கட்சி வெற்றி பெற்றது என கூறியிருப்பர். நல்ல வேளையாக அப்படி சொல்ல முடியாமல் போய் விட்டது. அதற்காக, பா.ஜ., மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் எனக் கூற முடியாது. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களே, 99 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளனர்.

சுட்டு விடுவர்

காங்., ஆட்சியில் எத்தனை முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டன என்பது எல்லாரும் அறிந்ததுதான். ஆனால் பா.ஜ., ஆட்சியில் எந்த மாநிலத்திலும் ஆட்சிக் கலைப்பு செய்யப்படவில்லை.இலங்கை தமிழர்களுக் காக தனி நாடு வேண்டுமென விரைவில் பிரதமரை சந்தித்து வலியுறுத்தப் போகிறேன். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன். இலங்கைக்கு நான் சென்றால், என்னை சுட்டு விடுவர். இலங்கை யில் தமிழர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். இருந்தாலும் சிங்கள வெறியர்கள் இருக்கின்றனர்.பிரதமர் மோடி, சிவன் மீது பக்தியாக இருக்கிறார்; தியானம் செய்கிறார்; விபூதி பூசிக் கொள்கிறார். காசி விஸ்வநாதர் கோவிலை மீட்டெடுத்தார்; எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார். ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன்.தேர்தலில் பா.ஜ., வுடன் கூட்டணி வைக்காததால் தான் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. அக்கட்சி கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. பா.ஜ., நாம் தமிழர் கட்சிகள் நல்ல கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன. இது தான் நடந்து முடிந்த தேர்தல் வெளிப்படுத்தும் செய்தி. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
ஜூன் 11, 2024 12:19

ஆன்மீகத்தில் உள்ள உங்களுக்கு அரசியல் நன்றாகவே புரிந்திருக்கிறது. ஆனால், அந்த EPS மற்றும் அந்த OPS -இருவருக்கும், அவர்களின் தனிப்பட்ட ஆதரவாளர்களுக்கும் புரியவில்லையே...


Anantharaman Srinivasan
ஜூன் 11, 2024 12:05

இவரோ சன்னியாசம் பெற்ற அனைத்தையும் துறந்த மடாதிபதி. அரசியல் பேசுவது தேவையில்லாத விஷயம்.


INDIAN
ஜூன் 11, 2024 07:21

பாஜக உடன் கூட்டணி அமைக்காததால் அதிமுக வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை, பாஜக வோடு கூட்டணி வைத்திருந்தால் அதிமுக வே இல்லை என்றாகியிருக்கும். பாஜக வோட நடவடிக்கை தெரிந்தே அதிமுக கூட்டணி வைக்கவில்லை, வா வா என்று கூப்பிடுவது கிட்னி எடுக்கத்தான் என்று தெரிந்ததால் தான் அதிமுக சேரவில்லை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க பாஜக வோடு சேர யாரும் தயாராக இல்லை, ஏனெனில் தொழில் அமர்ந்து முதுகில் குத்தும் கட்சி பாஜக, ஆகவே இவர்கள் பாமக வை வாங்கியதுபோல் கட்சிகளை தங்கள் பலத்தை வைத்தே கூட்டணிக்குள் சேர்த்திருக்கிறார்கள் , ஆகவே ஆபரேஷன் செய்யும்போது ஏற்படும் வலியைவிட நீண்ட காலம் உயிரோடு இருப்பதையே அனைவரும் விரும்புவர் அந்த வகையில் எடப்பாடி எடுத்த முடிவு மிக சரியானதே , அதைவிட முக்கியம் ஆன்மிகவாதிக்கு அரசியல் எதற்கு , அவருடைய வேலையை மட்டும் பார்த்தால் அவருக்கும் ஆன்மிகத்திற்கும் , அரசியலுக்கும் நல்லது


Mani . V
ஜூன் 11, 2024 07:13

சுவாமி, பூஜ்யம் பிளஸ் பூஜ்யம், பூஜ்யம்தானே?


வாய்மையே வெல்லும்
ஜூன் 11, 2024 08:12

மணிக்கு பெரியார் தாசன் பொறித்த பித்தளை பாத்திரம் பார்சல்


Svs Yaadum oore
ஜூன் 11, 2024 07:05

இந்த ஆதினம் சொல்வதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது கிடையாது ....நாளைக்கே ஹிந்துக்கள் வேறு சைவர்கள் வேறு என்று பேசுவார் ....இதுவரை எத்தனை சைவ சமய கோவில்களுக்கு திருப்பணி செய்துள்ளார் ??....எத்தனையோ கோவில்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போனது ....அதை கவனிக்க திறமையில்லை .....மற்றொரு திராவிட கொத்தடிமை ...


ramani
ஜூன் 11, 2024 06:58

ஆன்மீகவாதியான இவர் அரசியல் பேசியதில் தவறில்லை. சிறுபான்மை மத தலைவர்கள் அரசியல் பேசும்பொழுது பேசக்கூடாது என்று யாரும் சொல்வதில்லை. ஆனால் ஹிந்து மத தலைவர் ஒருவர் பேசினால் தவறா?


Senthoora
ஜூன் 11, 2024 06:49

ஐயா, அப்போ எப்படி பாஜாகா தோல்வி அடைததுங்க. உங்களுக்கு எல்லாம் எதுக்கு அரசியல். உங்க ஆன்மிகத்தை கவனித்துக்கொள்ளுங்க, இலங்கை புத்த பிக்குகள் போல அரசியல் செய்து வயிறு பொழப்பு தேவை இல்லை.


r ravichandran
ஜூன் 11, 2024 06:39

ஆன்மீகவாதிகள் அரசியல் பேச கூடாது, அது அவர்களுக்கு தேவையற்றது. ஆன்மீகம் வளரமட்டும் அவர்கள் பாடு படவேண்டும். அரசியல் பேச கட்சிகள் உள்ளன.


N.Purushothaman
ஜூன் 11, 2024 07:16

திருட்டு திராவிட அரசியல்வியாதிகள் ஒரு மதத்தின் நம்பிக்கையை மட்டும் கேவலமா பேசறப்போ நீங்க எங்க இருந்தீங்க ? அதை பத்தி சொன்னீங்கன்னா தெரிஞ்சிக்கலாம் ....எல்லாம் பொது அறிவுக்கு தான் ..


Babu
ஜூன் 11, 2024 06:33

தைரியமானா இந்து சாமியார்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை