உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து ஜாதிகளும் -அணி திரள வேண்டும்!

அனைத்து ஜாதிகளும் -அணி திரள வேண்டும்!

சென்னை:'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து ஜாதி சங்கங்களும் குரல் கொடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:சமூக நீதியை பொறுத்தவரை, தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி பயணிக்கிறது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று, 2010ல் உச்ச நீதிமன்றம் அளித்தது. இதை தமிழக அரசு இன்னும் செயல்படுத்தவில்லை. இதனால், எந்த நேரத்திலும் 69 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து இருக்கிறது. அதைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விபரங்களை வெளியிடுவது தான். அடித்தட்டு மக்கள் இலவசங்களுக்கு கையேந்தும் நிலையிலேயே இருக்க வேண்டும்; அவர்கள் அடிக்கடி மோதிக் கொண்டால் தான், நாம் நிம்மதியாக ஆள முடியும் என்பதுதான் தமிழக ஆட்சியாளர்களின் மன நிலை. இதை விட மோசமான மனோபாவம் இருக்க முடியாது. எனவே, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக, அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும். நாம் கொடுக்கும் அழுத்தம் ஆட்சியாளர்களை அசைத்துப் பார்க்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை