உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்.சி.சி.,யை விருப்ப பாடமாக சேர்க்க அனுமதி

என்.சி.சி.,யை விருப்ப பாடமாக சேர்க்க அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேசிய மாணவர் படை குறித்து, கல்லுாரிகளில் விருப்பப் பாடமாக சேர்த்துக் கொள்ள, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.புதிய கல்விக் கொள்கையின்படி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களின் இளநிலை பட்டப் படிப்பில், முதன்மை பாடங்கள் மட்டுமின்றி, பாடத்தொகுப்பு சாராத பிற பாடங்களையும் விருப்பப் பாடமாக எடுக்க வேண்டும்.இதற்கு, 'கிரெடிட்' என்ற கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். இந்த மதிப்பெண், மாணவர்களின் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல், கிரேடு மற்றும் தரவரிசையில் கணக்கில் எடுக்கப்படும். இந்த வகையில், என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படை குறித்து, கல்லுாரி மாணவர்கள் விருப்பப் பாடமாக எடுத்துக் கொள்ளலாம் என, பல்கலை மானியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.'கல்லுாரிகளில் தேசிய மாணவர் படையில் அங்கம் வகிக்கும் மாணவர்கள் மட்டும், இந்த விருப்பப் பாடத்தை தேர்வு செய்யலாம். பிரதான மதிப்பெண் பட்டியலில், விருப்பப் பாட கிரெடிட் மதிப்பெண்ணையும் சேர்க்கலாம்' என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

இளந்திரையன் வேலந்தாவளம்
ஜூலை 05, 2024 10:56

அருமை


தமிழ்வேள்
ஜூலை 05, 2024 09:01

ஆனால் தமிழகத்தில் திராவிட திருட்டு கட்சிகள் செயல்படுத்தாது... நாட்டுப்பற்று என்றால் திராவிட கும்பலுக்கு வேப்பங்காய்.... சாராயம் கஞ்சா பெண் பொறுக்கி தனம் திராவிட திருட்டு கட்சி உறுப்பினர் போன்ற செயல்களை மட்டுமே ஊக்குவிப்பு செய்யும்


யோகேஷ்
ஜூலை 05, 2024 08:03

தாராகமா செய்தலாம். முன்னே மாதிரியே பூரி, கிழங்கு குடுக்கணும்.


GMM
ஜூலை 05, 2024 07:10

கல்லூரிகளில் தேசிய மாணவர் படை விருப்ப பாடம். UGC யின் அனுமதி பயன் தரும். இதில் B சான்று, C சான்று வழங்கப்படும். இச் சான்றுக்கும் மதிப்பெண் தரலாம். கல்லூரிக்கு ஏதேனும் சலுகை தரலாம். பள்ளி கல்வி இதனை பின்பற்றலாம்.


ஹிந்தி பண்டிட்
ஜூலை 05, 2024 06:17

என்.சி.சி, யு.ஜி.சி பேரெல்லாம் பிரிட்டிஷ் பேரா இருக்குதே. பாரதீய சாரணீய சம்ஹிதா, பாரதீய சர்வககாசாலா அபியான்னு இந்தில பேர் வெச்சு இந்தியைத் திணியுங்க.


Ramesh
ஜூலை 05, 2024 07:25

அதானே நாடு எப்படி உருப்படலாம்? குட்டி சுவராக அல்லவா ஆக்க பட வேண்டும்


Pandi Muni
ஜூலை 05, 2024 08:55

எலே நீ உருது பக்கிரிதானே இங்க என்னாலே பண்ணிக்கிட்டுகிடேக்கே


sankaranarayanan
ஜூலை 05, 2024 05:59

தேசிய மாணவர் படை எல்லா , கல்லுாரிகளிலும் முன்பே விருப்பப் பாடமாக சேர்த்துக் கொண்டு பல மாணவர்கள் மாணவிகள் நம்மை அடைந்துள்ளனர் அதற்கு க்ரெடிட்டும் உண்டு சமீப காலமாகத்தான் அது கல்லூரிகளிலும் உயர் நிலை பள்ளிகளிலும் விருப்பப்படமாக இல்லை இது மாணவர்களிடையே தேச பற்றை உருவாகும் அவர்களின் உடல் திறமையும் தேறும் வேலை வாயுப்புக்ககளும் அதிகரிக்கும்


மேலும் செய்திகள்