உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராகுல் பங்கேற்ற ஒரே கூட்டத்தால் பா.ஜ., காலியாகி விட்டது! அவிநாசியில் முதல்வர் ஸ்டாலின் கிண்டல்

ராகுல் பங்கேற்ற ஒரே கூட்டத்தால் பா.ஜ., காலியாகி விட்டது! அவிநாசியில் முதல்வர் ஸ்டாலின் கிண்டல்

திருப்பூர் : ''கோவையில் ராகுல் பங்கேற்ற ஒரே ஒரு கூட்டத்தால் பா.ஜ., காலியாகிவிட்டது. மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்து விட்டது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.நீலகிரி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராஜா, திருப்பூர் இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் ஆகியோரை ஆதரித்து அவிநாசியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:நாட்டில் ஜனநாயகத்தை மீட்கவும், சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடக்கும் தேர்தல் இது. சமத்துவம் நிலைக்க, சகோதரத்துவம் தழைக்க, மத நல்லிணக்கம் செழிக்க, சமூக நீதியை நிலை நாட்ட, இண்டியா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். கோவையில் ராகுல் பங்கேற்ற கூட்டம், பாகுபலி மாதிரி பிரமாண்டமாக இருந்தது. ராகுல் பங்கேற்ற ஒரே ஒரு கூட்டத்தால் பா.ஜ., காலியாகிவிட்டது; மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்து விட்டது.

2,000 ஆண்டு அடிமை

தமிழக மக்களை உண்மையான அன்பால் மட்டுமே ஆள முடியும் என ராகுல் நிரூபித்து விட்டார். இந்தியாவை, இந்தியர்களை புரிந்து கொள்ள, தனக்கு வழிகாட்டியாக இருப்பது தமிழகமும், தமிழக வரலாறும், அரசியலும் தான் என, ராகுல் சுட்டிக் காட்டினார். இது, சாதாரண தேர்தல் அல்ல; சமூக நீதியை நிலைநாட்டும் இண்டியா கூட்டணி; சமூக பாகுபாட்டை விதைக்கும் பா.ஜ.,வுக்குமான தேர்தல். 2,000 ஆண்டு அடிமை தனத்துக்கு, தொடர் போராட்டம் வாயிலாக முற்றுப்புள்ளி வைத்து, கல்வி, வேலை வாய்ப்பில் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறி வருகின்றனர். பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட, அருந்ததியின, சிறுபான்மையின மக்கள் என, அனைத்து தரப்பு மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி, சமூக நீதி காக்கிறோம்.

ரத்து செய்வார்

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இட ஒதுக்கீடை ரத்து செய்வார். இந்தியா விடுதலை பெற்ற போது, 'பல தரப்பட்ட மக்கள் வாழும் நாடு அமைதியாக இருக்காது' என, உலக நாடுகள் கூறின. அந்த கணிப்புகளை பொய்யாக்கி உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தலைநிமிர்ந்து நிற்கிறது. இதற்கு காரணம், அரசியலமைப்பு சட்டம் தான். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தொடர்ச்சி 5ம் பக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sivakuamar Panneerselvam
ஏப் 14, 2024 20:27

ஆமாம் காழி ( உறுதியாக )ஆகி விட்டது


M.S.Jayagopal
ஏப் 14, 2024 18:55

ஸ்டாலினின் இந்த பேச்சை ராஹுல்காந்தியே நம்பமாட்டாரேஒரு முதல்வர் பதவியில் இருப்பவர் இன்னும் கொன்சம் அர்த்தத்துடன் பேசலாமே


NicoleThomson
ஏப் 14, 2024 13:07

கார்பொரேட் குடும்ப உறுப்பினரான நீங்க உங்களின் கார்பொரேட் ஊடகங்களை வைத்து நீங்க பொய்களை ன்ன வென்று சொல்லலாம்


P.Sekaran
ஏப் 14, 2024 10:49

இவர் புலம்புவதிலிருந்து பாஜக வளர்ந்திருக்கிறது என்று நிரூபணமாகியுள்ளது இவர் புலம்புவதை நிறுத்திக்கொள்ளட்டும் இவர் நேர்மையாக நடக்க கூடியவராக இருந்தால் எதற்கு பயப்படவேண்டும் எல்லோரும் வாக்களித்துவிடுவார்கள் இவர் தமிழ்நாட்டில் நடந்துகொள்வதிலிருந்து இவர் நேர்மையானவர் அல்ல என்று தெரிந்துவிட்டது செந்தில்பாலாஜி, பொன்முடி விசயங்களிலில் இருந்து இவர் குறுக்கு வழியில் செல்லக்கூடியவர் என்று தெரிகிறது நீதிபதியை மிரட்டுவதிலிருந்து தெரிகிறது


வாய்மையே வெல்லும்
ஏப் 14, 2024 10:17

கட்டுமரம் கூட நம்பாத பொய்யய் உருட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார் மக்கு சாம்பிராணி துண்டுசீட்டு சித்தர்


vbs manian
ஏப் 14, 2024 09:43

நாடு முழுதும் காலியான கட்சி ஆளும் கட்சி காலி என்கிறது யார் காலி என்று ஜூனில் தெரியும்


rsudarsan lic
ஏப் 14, 2024 07:29

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


R.MURALIKRISHNAN
ஏப் 14, 2024 06:59

முதல்வர் அவர்களே உம்முடையது கூட்டி வந்த கூட்டம் மோடிஜி அவர்களுக்கு தானாக சேர்ந்த கூட்டம் உம் தந்தையை போல் ஊழல் பெருச்சாளியாக இருந்து கொண்டு இருந்தால் தமிழ்நாட்டில் இனி கவுன்சிலர் பதவிலை கூட திமுக பெறாது நாட்டை கொள்ளையடிக்க உருவானது தான் இண்டியா கூட்டணி என்பதை மக்கள் நன்கறிவர்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ