உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை உட்பட மூவர் மீது வழக்கு

நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை உட்பட மூவர் மீது வழக்கு

கோவை:கோவை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும், தீவிர பிரசாரம் மேற்கொள்கின்றனர்.கோவையில் அண்ணாமலை பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் தொண்டர்களும், பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருந்து, அவரது பேச்சை ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர்.இந்நிலையில், அண்ணாமலை நேற்று முன்தினம், வழக்கம் போல பீளமேட்டை அடுத்த ஆவாரம்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள சென்றார்.அப்போது இரவு, 10:00 மணியானதால் அவர் தேர்தல் நடத்தை விதியின் படி, பிரசாரத்தை முடித்துக் கொண்டார்.ஆனால் அவர் பொதுமக்களை பார்த்து கையசைத்தார்; தொண்டர்களும் கோஷங்களை எழுப்பினர். இதனால் மற்ற கட்சினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். தேர்தல் பறக்கும் படை அலுவலர், பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, செயல்பட்டதாக அண்ணாமலை மற்றும் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் மீது, மூன்று பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி