உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யுடியூப் சேனல்களை முறைப்படுத்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

யுடியூப் சேனல்களை முறைப்படுத்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு:யுடியூப் சேனல்கள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. குற்ற வழக்குகளில் யுடியூப் சேனல்கள், ஊடக விசாரணை நடத்துவதால், போலீ சாரின் புலன் விசாரணை பாதிக்கப்படுகிறது. யுடியூப் சேனல்களில், எவ்வித கட்டுப்பாடும் இன்றி வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. இந்த பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை. ஆகையால், பொது அமைதி பாதிக்கப்படுவதால், யுடியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுவுக்கு நான்கு வாரங்களில் மத்திய அரசுக்கு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை