உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்த பி.ஆர்.ஓ., மீது புகார் மனு

தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்த பி.ஆர்.ஓ., மீது புகார் மனு

சென்னை:'தேர்தல் நடத்தை விதிகளை மீறி, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திவாகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு இணை செயலர் பாபுமுருகவேல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், கடிதம் கொடுத்துள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தி.மு.க., அரசு தேர்தல் நடத்தை விதிகளை மீறி, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திவாகர், தி.மு.க., அரசின் சாதனைகள் மற்றும் தி.மு.க., நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளை, அரசு செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளார். தன் 'இ - மெயில்' முகவரியில் இருந்து, பத்திரிகைகளுக்கு அனுப்பி உள்ளார். மேலும் வடசென்னை தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமி, 75 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவார் என தெரிவித்து உள்ளார். அவரது வாட்ஸாப் குரூப்பில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு சாதனைகளை பகிர்ந்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Yaro Oruvan
ஏப் 18, 2024 13:59

இந்த முறை நீங்கள் இரட்டை இலைக்கு போட்டால் நீங்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் திமுகவிற்கு சாதகமாக எண்ணம் உண்மையாக இருந்தால் இம்முறை பாஜகவிற்கு வாக்களியுங்கள் இது நாடாளுமன்ற தேர்தல் நமக்கு தேவை நாட்டை உயர்த்தும் நமக்கு உதவும்


மேலும் செய்திகள்