உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய சென்னை உருவாக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

புதிய சென்னை உருவாக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜகுமார், பேசியதாவது:எம்.எல்.ஏ.,க்கள் மக்கள் பணியாற்ற, அதிகாரிகள் துணை நிற்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் மட்டும் அரசை நடத்துவது போன்ற பார்வை மாற்றப்பட வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள், மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.மாநில அரசு திட்டங்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரியாமல் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலை மாற்றப்பட வேண்டும். ஏனெனில் மக்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் வாக்குறுதி அளிக்கின்றனர். எனவே, எந்த திட்டமாக இருந்தாலும், எம்.எல்.ஏ.,க்களுடன் கலந்து ஆலோசிக்கும் நடைமுறையை, அரசு உருவாக்க வேண்டும். திறப்பு விழாவுக்கு அழைப்பதுடன், கல்வெட்டில் எம்.எல்.ஏ., பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும்.புதிய சட்டசபை கட்டப்பட வேண்டும். தொகுதிகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. எனவே, அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். புதிய சென்னை உருவாக்கி, தலைமைச் செயலகம், சட்டசபை கட்டடம் கட்ட வேண்டும்.சட்டசபை மேலவையை துவக்குவதற்கு, அரசு முயற்சி எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை, குறைந்தது 1 கோடி ரூபாய் அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Venkatasubramanian krishnamurthy
ஜூன் 27, 2024 06:49

கூட்டணியில் உள்ள கட்சியே நிகழ்ச்சிகளுக்கு தொகுதி உறுப்பினர்களை அழைக்க வேண்டும், அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதெல்லாம் அப்பாற்பட்ட விஷயம். இதில் புதிய தலைமைச் செயலகம், சட்டசபைக் கட்டிடம் கட்ட வேண்டும் என்பதுதான் ஹைலைட். கட்டுமானப் பணியாயிற்றே. குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறது தாய்க் கூட்டணித் தலைமை. அடுத்து இரண்டு வருடங்களுக்குள் கட்டுமானம் முடிவதுபோல் அறிவிப்பு வரலாம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை