உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சும்மா கிடக்கும் கூட்டுறவு கிடங்குகள்

சும்மா கிடக்கும் கூட்டுறவு கிடங்குகள்

சென்னை: கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர் விற்பனையாளர் சங்கங்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும், 10 டன், 500 டன், 1,000 டன், 5,000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. ஒட்டு மொத்தமாக, 5.48 லட்சம் டன் கொள்ளளவில் 4,047 கிடங்குகள் உள்ளன.அவை, அறுவடை காலங்களில் தங்களின் விளை பொருட்களை பாதுகாப்பாக வைக்க, விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப் படுகின்றன. பலருக்கு இந்த விபரம் தெரிவதில்லை. இதனால், பல கிடங்குகள் முழு கொள்ளளவுக்கு பயன்படுத்தப்படாமல் உள்ளன. எனவே, கிடங்குகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், அவை தொடர்பாக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, கலெக்டர்களுக்கு கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் கோபால் கடிதம் எழுதியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை