மேலும் செய்திகள்
பெயர் விடுபட்ட வாக்காளர்கள் பதட்டப்பட வேண்டாம்: இபிஎஸ்
2 hour(s) ago | 4
அரசு நிவாரணத் தொகையில் லஞ்சம்: கல்நெஞ்சம் கொண்ட விஏஓ கைது
4 hour(s) ago | 12
திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
7 hour(s) ago | 2
சென்னை: ராமேஸ்வரம் உள்ளிட்ட ஐந்து விரைவு ரயில்களில், எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர்.தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு ரயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு எல்.எச்.பி., எனப்படும், நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது, அதிர்வு இல்லாமல், பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன், சொகுசு இருக்கைகள், மொபைல் போன்,' சார்ஜிங்' வசதி உள்ளிட்ட வசதிகள் இருக்கும்எல்.எச்.பி., சாதாரண பெட்டிகளில், 80 படுக்கைகளும், 'ஏசி' பெட்டியில் 72 படுக்கைகளும் இருக்கும். ஏற்கனவே, பல்வேறு முக்கிய விரைவு ரயில்களில், எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் கன்னியாகுமரி, நெல்லை, பொதிகை, பாண்டியன், ராக்போர்ட், முத்துநகர் உள்ளிட்ட விரைவு ரயில்களில் எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ராமேஸ்வரம், திருச்செந்துார், கொல்லம், மன்னை, குருவாயூர் ஆகிய ஐந்து விரைவு ரயில்களில், இன்னும் எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்படவில்லை.இதுகுறித்து, ரயில் பயணியர் கூறியதாவது: விரைவு ரயில்களில், எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்குவது வரவேற்கத்தக்கது. இருப்பினும், முன்பதிவு இல்லாத பெட்டிகள், படுக்கை வசதி உடைய முன்பதிவு பெட்டிகளை குறைக்கக் கூடாது. ராமேஸ்வரம், கொல்லம், திருச்செந்துார் உள்ளிட்ட விரைவு ரயில்களிலும் எல்.எச்.பி., பெட்டிகளை இணைத்து இயக்கினால், பயணியருக்கு கூடுதல் வசதி கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களில், எல்.எச்.பி., பெட்டிகளை இணைத்துள்ளோம். புதிதாக எல்.எச்.பி., பெட்டிகள் வர, வர பழைய பெட்டிகளை நீக்கிவிட்டு, எல்.எச்.பி., பெட்டிகணை இணைத்து வருகிறோம். எஞ்சியுள்ள விரைவு ரயில்களிலும் படிப்படியாக எல்.எச்.பி., பெட்டிகளை இணைக்க உள்ளோம்' என்றனர்.
2 hour(s) ago | 4
4 hour(s) ago | 12
7 hour(s) ago | 2